முதியோர் இல்லத்தில் அம்மாவின் காயம்  

                                 

                                     ஒரு ஊரில் யோசுவா என்ற வாலிபன் இருந்தான். அவன் சிறுவயதில் இருக்கும் போதே அவன் அப்பா இறந்து விட்டார்.

அவனது தாயார் யோசுவாவை மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்து வந்தார். அவனது தாயார் ஒவ்வொரு வீடாக சென்று

பாத்திரம் தேய்க்கும் வேலை செய்து வந்தார். அந்த பணத்தில் அவர் யோசுவாவை நன்றாக படிக்க வைத்தார் .

அவன் கல்லூரி படிப்பை முடித்தவுடன் ஒரு பெரிய கம்பெனியில் வேலை கிடைத்தது.

                                            வேலைக்காக சென்னை சென்றான் யோசுவா. சிறிது மாதங்கள் அவன் தாயாருக்கு பணம் அனுப்பினான்.

அவன் சென்னையில் நண்பர்களுடன் சேர்ந்து வாழ்க்கையில் ஜாலியாக இருந்து வந்தான்.

நண்பர்கள் வட்டாரம் பெறுக பெறுக தன் தாயாருடன் பேசுவதை தவிர்த்து வந்தான். அதன் பிறகு அவன் பணம்

அனுப்புவதை நிறுத்தினான். போனில் பேசுவதையும் தவிர்த்து வந்தான். இப்படி பட்ட காலத்தில் யோசுவாவின் தாயார்,

 அவனை பார்க்க சென்னை வந்தார். அவன் வேலை பார்க்கும் கம்பெனிக்கு வந்தார்.

தாயாரை பார்த்த யோசுவா அதிர்ச்சி அடைந்தான்.

அவன் வேகமாக தாயாரிடம் வந்து " ஏன் இங்கு வந்தீர்கள்?, யாரை கேட்டு வந்தீர்கள்? என்று கோவமாக பேசினான்.

அதற்கு அவனது தாயார் " மகனே, நீ என்னுடன் பேசியே பல மாதங்கள் ஆகிறது. அதான் என் மகன் நீ சுகமாக இருக்கிறாயா?

என்று பார்க்க வந்தேன் என்றார்.

அதற்கு மகன், அதான் பார்த்துட்டல கிளம்பு நான் போன்ல பேசுறேன் என்று தாயாரை துரத்தினான்.

அவன் இப்படி பேசி கொண்டிருக்கையில் அவனது நண்பர்கள் வந்தனர்...

நண்பர்கள் அவனிடம் யாருடா இவங்க? ரெம்ப நேரமா பேசிட்டு இருக்க என்று கேட்டனர்.

உடனே யோசுவா நண்பர்களை பார்த்து " இது எங்க வீட்டு வேலைக்காரி டா. அம்மா நான் எப்படி இருக்கன்னு பார்த்துட்டு

வர அனுப்பி இருகாங்க".

இந்த வார்த்தைகளை கேட்டதும் யோசுவாவின் தாயார் மனமுடைந்தார். தன்னை தன் மகன் எந்த நிலைமையில் வைத்து

இருக்கான் என்பதை புரிந்து கொண்டு அந்த இடத்தை விட்டு வேகமா கிளம்பினார்.

யோசுவா, தனது கம்பெனியில் வேலை பார்க்கும் ஜாஸ்மின் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டான்.

இந்த காரியம் அவனது தாயாருக்கு தெரியாமல் இருந்தது. ஒரு நாள் யோசுவாவிற்கு ஒரு எண்ணம் வந்தது. அந்த எண்ணத்தை

தனது மனைவியாகிய ஜாஸ்மின்க்கு கூறினான். அதென்னவெனில் எனது ஊரில் எனக்கு சிறிது நிலமும் வீடும் உள்ளது.

அதில் எனது தாயார் வசித்து வருகிறார். நான் போய் அந்த நிலத்தை விற்று ,எனது தாயாரை முதியோர் இல்லத்தில் சேர்க்க

போகிறேன் என்றான். மனைவிக்கும் இந்த காரியம் நன்றாகபட்டது. அவளும் சம்மதித்தாள். ஏனென்றால் யோசுவா தன் தாயை 

பாரமாக கருதினான். உடனே ஊருக்கு கிளம்பி வந்தான்.

யோசுவாவை பார்த்த அவனது தாயார் மிகுந்த மகிழ்ச்சி உற்றார்.

தாயார் " மகனே இப்பதான் உனக்கு அம்மாவை பார்க்கணும்னு ஆசை வந்துச்சான்னு" கண்ணீர் மல்க கேட்டார்.

அதற்கு யோசுவா " அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை .. இந்த வீட்டையும் இந்த நிலத்தையும் வித்து , அந்த பணத்தை வச்சு

சென்னைல ஒரு வீடு வாங்கலாம்னு நினைக்குறேன்.

இதை கேட்ட அதிர்ச்சி அடைந்த யோசுவாவின் தாயார் " மகனே! நான் எங்கு போவேன்? என்று கேட்டார்.

அதற்கு யோசுவா " உன்னை, நம்ம ஊரில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர் காப்பகம் இருக்குதுல அதுல

விட்டுட்டு போறேன். நீ சீக்கிரம் கிளம்பு. எனக்கு நிறைய வேலைகள் இருக்கு. என் மனைவியை ஊரில் தனியாக

விட்டுட்டு வந்து இருக்கேன்  என்று கூறினான்.

இந்த வார்த்தைகளை கேட்ட யோசுவாவின் தாயார் மிகவும் மனமுடைந்தார்.

அவர், அவனை நோக்கி மகனே! நீ கல்யாணம் பணிகொண்டாயா? என்னிடம் ஏன் கூறவில்லை? என்று கேட்டார்.

அதற்கு யோசுவா " நீ வந்து என்ன கிழிக்க போற? நான் என் கம்பெனில பெரிய பதவில இருக்கேன். உன்னைய

என் தாய்னு சொல்லவே அசிங்கமா இருக்கு. என்று கூறினான்.

இதை கேட்ட யோசுவாவின் தாயார், மகனே ! நான் உன்னை எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வைத்தேன்.

நான் கஷ்ட பட்டு படிக்க வைக்க போய்த்தான் நீ இவ்வளவு பெரிய பதவில் இருக்கிறாய்  என்றார் .

இதை எல்லாம் காதில் வாங்காத யோசுவா " நீ சும்மா பேசி டைம் வேஸ்ட் பண்ணாத. நான் முதியோர் இல்லத்தில் பேசிட்டேன்

 கிளம்பு என்று கூறி அவசரப்படுத்தினான்.

யோசுவாவும், அவனது தாயாரும் முதியோர் காப்பகத்திற்கு வந்தனர்.

அந்த காப்பகத்தை ஒரு வயதான பெண்மணி நடத்தி வந்தார். அவரது பெயர் ரோஸ்.

அந்த வயதான பெண்மணி, யோசுவாவின் தாயாரை கண்டதும், "அம்மா, உங்களை எங்கேயேயோ பார்த்ததுண்டா? என்று கேட்டார்.

அந்த வயதான பெண்மணி, யோசுவாவை சிறிது நேரம் வெளியே இருக்க சொன்னார்.

யோசுவா வெளியே சென்ற பிறகு, யோசுவாவின் தாயாரிடம் வினவினார்..

யோசுவாவின் தாயார் கூறிய பதிலை கேட்டு அதிர்ச்சி  அடைந்தார் அந்த வயதான பெண்மணி.

அவரை சிறிது நேரம் காப்பகத்திற்கு உள்ளே  இருக்க சொல்லி விட்டு யோசுவாவை அழைத்தார்.

உள்ளே வந்த யோசுவா " என்ன என் அம்மா எதாவது கதை விட்டாளா? அந்த கிழவிக்கு வேற வேலையே இல்லை என்று கூறினான்.

இதை கேட்ட கோவப்பட்ட வயதான பெண்மணி " யோசுவா, நான் சொல்வதை கேள்.

 27 வருடத்திற்கு முன்பு  பணக்காரர் ஒருவர் தனது மனைவியுடன் இந்த காப்பகத்திற்கு வந்தார்.

இங்கு ஒரு ஆண் குழந்தையை அவர்கள் தத்து எடுத்தனர். சிறிது காலம் சென்ற பிறகு, அந்த பணக்காரர் இறந்து போனார்.

அவரது மனைவியோ படிப்பறிவு இல்லாதவர். இதை பயன்படுத்தி கொண்ட கணவரின் உறவினர்கள் அந்த அம்மாவை

ஏமாற்றி வெளியே துரத்தினர். கையில் குழந்தையோடு என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார்.

இருப்பினும் தனது குழந்தைக்காக நான் வாழவேண்டும், எப்படியாவது தனது குழந்தையை பெரிய ஆளாக மாற்ற வேண்டும்

என்று அந்த தாயார் பாத்திரம் கழுவி தனது குழந்தையை படிக்க வைத்தார். அந்த குழந்தையும் வளர்ந்து

பெரிய கம்பெனியில் வேலை கிடைத்தது. பெரிய ஆளாக ஆனதும், அந்த மகன் தனது தாயாரை கேவலமாக நினைத்தான்.

கஷ்டபட்டு படிக்க வைத்த தாயைஅம்மா” என்று கூப்பிட கூட வெட்கப்பட்டான்.

பொறுமையாக கேட்டு கொண்டிருந்த யோசுவா , அந்த வயதான பெண்மணியை நோக்கி ," இதை ஏன் என்னிடம்

கூறுகிறீர்கள் " என்று கேட்டான் .

அதற்கு வயதான பெண்மணி, " நீயே அந்த ஆண் குழந்தை " ,அன்று அனாதையாய் கிடந்த உன்னை இந்த

 காப்பகத்தில் எடுத்து வளர்த்த உன் தாயை இன்று அதே காப்பகத்தில் அனாதையாய் விட்டு செல்கிறாய். என்றார்.

இதை கேட்டதும், அதிர்ச்சி அடைந்த யோசுவா மனமுடைந்து அழுதான். தன் அம்மாவுக்கு  தான் செய்த துரோகத்தை

நினைத்து சத்தமிட்டு அழுதான்.

ஐயோ ! என் தாயை நான் உணராமல் போனேனே . எவ்வளவு பெரிய பாவத்தை செய்ய துணிந்தேன்” என்று அழுதான்.

அவனை சமாதான படுத்திய அந்த வயதான பெண்மணி, சில அறிவுரைகளை கூறினார்.

யோசுவா ! இந்த உலகத்தில் நல்ல பெற்றோர் கிடைப்பது ஆண்டவர் கொடுக்கிற ஈவு. நிறைய பேருக்கு இது புரிவதில்லை.

அவர்களுக்கு புரியும் போது அவர்களது பெற்றோர் இந்த உலகத்தில் இருப்பதில்லை.

பெற்றோர் அருமை என்னவென்று , அம்மா, அப்பா இல்லாதவர்களுக்கு மட்டுமே அந்த வலி புரியும்..

இனிமேலாவது உன் தாயை நன்றாக பார்த்து கொள் என்று அறிவுரை வழங்கினார். 

பரிசுத்த வேதாகமத்தில் இயேசு கிறிஸ்து இவ்வாறு கூறி இருக்கிறார்.

அதென்னவெனில் " உன் நாட்கள் நன்றாக இருப்பதற்கு, உன் தகப்பனையும், உன் தாய்யையும் கணம் பண்ணுவாயாக "

என்று கூறி இருக்கிறார்.

பரிசுத்த வேதாகமத்தை நன்றாக படி என்று ஒரு வேதாகமத்தை கொடுத்தார்

யோசுவா தனது தாயிடம் மன்னிப்பு கேட்டு திரும்பவும் வீட்டுக்கு அழைத்து கொண்டு போனான்.

அதன் பிறகு அவன் தனது தாயாரை மிகவும் சிறப்பாக கவனித்து கொண்டு வந்தான்