யோகாவின் நன்மைகள் -11 | நின்ற பாத ஆசனம் & 1ஹஸ்த பாதங்குஸ்தாசனம் செய்முறை-பலன்கள்| #Weight Loss


நின்ற பாத ஆசனம்



செய்முறை :

   ஒற்றைக் காலில் நின்று செய்யும் ஆசனம். நேராக நின்று, இடது காலை மடக்கி குதிங்காலை வலது கால் தொடையின் ஆரம்பப் பகுதியில் படும்படி நிறுத்த வேண்டும். இரு கைகளையும்  முடிந்தளவு  மேலே உயர்த்தவும்

. ஆரம்பத்தில் இலகுவாக செய்ய வராது. சுவரை ஊன்று கோலாக பற்றி செய்யலாம், பின் வலது காலை மடக்கி   இடது தொடையின் ஆரம்பப் பகுதியில் படும்படி நிறுத்த வேண்டும். ஒரு முறைக்கு 1 நிமிடமாக 2 அல்லது 4 முறை செய்யலாம்.  நின்று கொண்டு காலை பத்மாசனம் செய்வது போன்று செய்யலாம். மூச்சு சாதாரணமாக விடலாம்.

பலன்கள் :

  தியானம், மன ஒருமைப்பாடு , திடசிந்தனை  இவைகளுக்கு சிறந்த ஆசனம்.

வாதம், நரம்புத் தளர்ச்சி, சோம்பேறித்தனம் இவைகள் ஒழியும். மனச் சஞ்சலம் ஒழியும். திட மனது ஏற்படும். காரியங்களைச் செம்மையாக முடிக்கும் ஆற்றல் உண்டாகும். பயம் ஒழியும். ரத்த ஓட்டம் சீர்படும்.  மன அமைதி பெறும்.

 

ஹஸ்த பாதங்குஸ்தாசனம்:






கால்களை விறைப்பாக நிறுத்தி, கைகளைப் பக்கவாட்டில் தொங்கவிட்டு , மார்பை முன்புறம் தள்ளி நிமிர்த்தி, ஒரு காலைத் தூக்கும் போது மூச்சை வெளியிட்டு, காலை படத்தில் காட்டியுள்ளபடி  உடம்பிற்கு நேர்கோணத்தில் கொண்டு வரவும். ஒரு கால் தூக்கிய நிலை வந்த வந்தவுடன்




இருகைகளையும்  படத்தில் காட்டியுள்ளபடி  நீட்டி, தூக்கிய நிலையுள்ள காலின் பாதங்களை சுவாசத்தை வெளியே விட்ட நிலையில் பிடித்துக் கொண்டு சில வினாடிகள் நிறுத்திவிட்டு, பின்னர் சுவாசத்தை கலைக்கலாம். காலை மாற்றி செய்யலாம். காலையில் இவ்வாசனம் செய்வது நலம். முதலில்  காலை நேர்கோட்டில் நிறுத்துவது சிறிது கடினமாக இருக்கும். சுவரில் காலை நேராக ஊன்றி இவ்வாசனம் செய்ய பழகலாம்.



 

பலன்கள்:

  உடலின் இடையிலுள்ள தசைநார்கள் மிருதுவாகி வளையும் தன்மை பெறும்.

அடிவயிற்றின் இறுக்கத்தை அதிகப்படுத்தி சீரான இரத்த ஓட்டம் உண்டாக்குகிறது.அடிவயிற்றுத் தசைகளின் சுவர் சிறந்த பயிற்சி பெறுவதால் அவை புத்துயிர் பெறுகிறது. மலச்சிக்கலை நீக்குகிறது. இடை அழகு பெறுவதற்கு உதவுகிறது.