யோகாவின் நன்மைகள் -12 | மகா முத்ரா & அர்த்த மத்ச்யேந்திராசனம் செய்முறை-பலன்கள்| #Weight Loss
மகா
முத்ரா :
முதலில் வஜ்ஜிராசன நிலையில் அமர்ந்து , கைகளை முதுகின் பின்புறம் படத்தில் காட்டியுள்ளபடி கட்டிக் கொண்டு , முன்னாள் குனிந்து தலையால் தரையை தொடவும். உடலை 3 மடிப்புகளாக வளைப்பதால் உடல் விறைப்பு தன்மை குறையும். சாதாரண மூச்சுடன் 20 எண்ணிக்கை இவ்வாசனத்தில் இருந்தால் போதுமானது . 3 முறை செய்யவும். இந்த ஆசனம் யோக முத்ரா ஆசனம் போல் இருக்கும். யோக முத்ராவில் பத்மாசனம் நிலையில் அமர்ந்து செய்யும் ஆசனம். மகா முத்ரா வஜ்ஜிராசன நிலையில் அமர்ந்து செய்யும் ஆசனம்.
பலன்கள்
:
வாத நோய்க்கு சிறந்த
ஆசனம்.முதுகின் தசை எலும்புகள் , வயிற்று
உறுப்புகள் புத்துணர்ச்சி பெறும். கல்லீரல், மண்ணீரல் அழுத்தமடைந்து நன்கு வேலை செய்யும். மலச்சிக்கல்
நீங்கும். நீரழிவு நோய் நீங்கும். தொந்தி
கரையும். முதுகெலும்பு நேராகும்.
பெண்கள்
மாதவிடாய் நோய்கள் நீங்கும். வயிற்றில் ஆபரேஷன் செய்திருந்தால் 6 மாதம் இவ்வாசனம் செய்தல் கூடாது.
அர்த்த
மத்ச்யேந்திராசனம் :
செய்முறை:
உக்கார்ந்து
இடது காலை மடக்கி , இடது
காலின் குதிங்காலை தொடைகளின் ஆரம்பத்திற்கு கொண்டு வரவும். வலது முழங்காலை மடக்கி
நிறுத்தி , இடது முழங்காலுக்கு அருகே
படத்தில் காட்டிய படி, வலது காலை
நிறுத்த வேண்டும். உடலை வலப்பக்கம் திருப்ப
வேண்டும். இடது கையை வலது
முழங்காலுக்கு வெளியை வீசி, வலது காலை இடது
கையின் பின்புறமாய் இருக்கும்படி நிறுத்தி, இடது கையால் இடது
முழங்காலை பிடிக்க வேண்டும். பின் முதுகை வலது
பக்கம் திருப்பி , வலது கையைப் பின்னல்
வீசி மூச்சை வெளியே விட்டு வலது கை விரல்களால்
வலதுகாலில் கணுக்காலை பிடித்து, உடலை நன்றாக திருப்பி
இழுக்கவும். பின் ஆசனத்தை கலைத்து,
இடது பக்கம் மறுபடியும் அம்மாதிரி மாற்றிச் செய்ய வேண்டும்.கொஞ்சம் கடினமான ஆசனம் இது. பழக பழக
எளிதில் செய்ய முடியும்.
பலன்கள்:
முதுகெலும்பு திருக்கப்ட்டு புத்துணர்ச்சி ஏற்படும்.
நாடி, நரம்பு மண்டலம் நன்கு வேலை செய்யும். இளமை
மேலிடும். முகக்கவர்ச்சி உண்டாக்கும். விலா எலும்புகள் பலப்படும். தொந்தி கரையும் .



0 Comments