யோகாவின் நன்மைகள் - 24 | அகர்ண தனுராசனம் & அகர்ஷனா தனுராசனம் செய்முறை| #Weight Loss
அகர்ண தனுராசனம்
Akarna Dhanurasanam
செய்முறை:
Step 1 : முதலில் விரிப்பில் மீது கால்களை நீட்டி அமர்ந்து கொள்ள வேண்டும். முதுகு மற்றும் தலை நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும்.
Step 2 : பின் இரு கைகளாலும் இரு கால்களின் பெரு விரல்களை பிடித்து கொள்ளவேண்டும்.
Step 3 : பின் படத்தில் காட்டியுள்ளபடி வலது கால் பெரு விரலை பிடித்தபடி வலது காலை முழங்காலை மடித்து வலது காதுக்கு அருகில் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.
Step 4 : வலது காலை , வலது காதுக்கு அருகில் பொருந்தி இருக்கும் படி வைக்க வேண்டும்.
Step 5 , 6
: பின் வலது காலை நன்கு நேராக இருக்கும் படி காலை நன்கு உயர்த்த வேண்டும். வலது கை விரல்கள் , வலது காலின் பெருவிரலை பிடித்தபடி இருக்க வேண்டும். இந்த ஆசன நிலையில் 3 முதல் 5 வினாடி வரை ஆசன நிலையில் இருக்க வேணும்.
Step 7 :பின் மெதுவாக காலை இறக்கி Step 4 நிலைக்கு கொண்டு வர வேண்டும்.
Step 8 . பிறகு இரு கால்களையும் பிடித்தபடி Step 2 கொண்டு வரவும்.
பின் கால்களை மாற்றி இவ்வாசனத்தை செய்ய வேண்டும். 2 அல்லது 3 முறை செய்யலாம்.காலை 6 மணிக்குள் அல்லது மாலை 6 மணிக்கு மேல் செய்ய வேண்டும்.வெறும் வயிற்றிலோ ,அல்லது சாப்பிட 3 மணி நேரத்திற்கு பிறகு செய்ய வேண்டும்.
பலன்கள் :
காது கேட்கும் சக்தி அதிகரிக்கும்.கைகள், தோள்கள், தொடைகள், மார்பு மற்றும் முதுகு வலிமையைப் பெறுகின்றன.தொடைகள் மற்றும் இடுப்பு நல்ல வடிவம் பெற உதவுகிறது.
முதுகெலும்பு நன்கு பலம் பெறும்.கைகள் ,கால்கள் நன்கு வளர்ச்சி அடையும். பெண்களின் மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துகிறது. செரிமான பிரச்சனை சரி செய்கிறது.நுரையீரலை விரிவாக்குவதால் சுவாச திறன் அதிகரிக்கும்..நியாபக சக்தி மேம்படுத்துகிறது.முதுகு வலி, இடுப்பு வலி நீங்குகிறது. கீழ் வாதம் நீங்குகிறது.
அகர்ஷனா தனுராசனம் :
Akarshana Dhanurasanam
செய்முறை:
'அகர்ஷனா' என்றால் 'இழுத்தல்', 'தனஸ்' என்றால் 'வில்' என்று பொருள்.நிமிர்ந்து உட்கார்ந்து, கால்களை நீட்டி, அவற்றை ஒன்றாக நெருக்கமாக வைத்திருங்கள். முதுகு,மற்றும் தலை நேராக இருக்க வேண்டும். பின் இடது கையால் வலது காலின் பெருவிரலை பிடித்து , வலது முழங்காலை மடித்து இழுத்து, இடது காதுகளுக்கு அருகில் காலை பாதங்களை கொண்டு செல்ல வேண்டும். பின் படத்தில் காட்டியுள்ளபடி, வலது கையால் நீட்டியுள்ள இடது காலின் பெருவிரலை மடக்கியுள்ள வலதுகாலை தாண்டி பிடிக்க வேண்டும். இந்த ஆசன நிலையில் 3 முதல் 5 வினாடி வரை ஆசன நிலையில் இருக்க வேணும். பின் கால்களை மாற்றி இவ்வாசனத்தை செய்ய வேண்டும். 2 அல்லது 3 முறை செய்யலாம்.
பலன்கள்:
முதுகெலும்பு நன்கு பலம் பெறும்.கைகள் ,கால்கள் நன்கு வளர்ச்சி அடையும். பெண்களின் மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துகிறது. செரிமான பிரச்சனை சரி செய்கிறது
.முதுகு வலி, இடுப்பு வலி நீங்குகிறது. கீழ் வாதம் நீங்குகிறது.
For More Details : Subscribe and Like Our Channel
(Rehoboth Cyrus Uzhagam)
https://youtu.be/D-DsvJRTQR0




0 Comments