யோகாவின் நன்மைகள் - 23 | அதோ முக ஸ்சவனாசனம் & மகர அதோ முக ஸ்சவனாசனம் செய்முறை| #Weight Loss
ஏக பாத ராஜகபோடசனம்:
eka pada rajakopadasanam :
செய்முறை :
முதலில் விரிப்பின் மீது மண்டியிட்டு (வஜ்ராசன நிலையில் ) அமர்ந்து கொள்ள வேண்டும். பின் வலது காலை பத்மாசன நிலையில் மடித்து முன்புறம் கொண்டு செல்லவும்.இது காலை படத்தில் காட்டியுள்ள படி பின் புறமாக நீட்டி கொள்ள வேண்டும் .கைகளை முன்புறம் ஊன்றி கொள்ள வேண்டும். இந்த நிலையில் புறாவை போன்று காணப்படுவதால் இவ்வாசனம் பிஜியன் (Pigeon) ஆசனம் எனப்படுகிறது.
step
1: இடது கையால் இடது காலின் பாதங்களை பிடித்து கொள்ள வேண்டும்.
step
2: இரு கைகளாலும் இடது காலின் முழங்காலை மடக்கி,முதுகுக்கு அருகில் கொண்டு செல்ல வேண்டும்.
step 3: படத்தில் காட்டியுள்ளபடி உடலையும், தலையும் பின்புறமாக வளைக்க வேண்டும். தலையால் இடது காலின் பாதங்களை தொட முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு 10 எண்ணிக்கையில் ஆசன நிலையில் இருக்க வேண்டும். பின் கால்களை மாற்றி செய்ய வேண்டும்.
பலன்கள் :
தொடைகள், இடுப்பு,வயிறு, மார்பு மற்றும் தோள்கள் மற்றும் கழுத்தை நேராகவும், நீட்டவும் (stretches ) உதவுகிறது.வயிற்று உறுப்புகள் சிறப்பாக செயல்பட தூண்டுகிறது.தொந்தி கரைகிறது. இடுப்பு நெகிழ்வுத்தன்மை அடைகிறது. இடுப்பு வலி, முதுகுவலி குறைகிறது. செரிமானத்தை மேம்படுத்துவதால் ஒற்றைத் தலைவலியை குணப்படுத்த முடியும் . கணையம், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற உறுப்புகள் நன்கு செயல்பட உதவி செய்கிறது.இடுப்பு தசைகள் நீட்டி, மேம்பட்ட இனப்பெருக்க அமைப்புக்கு இடமளிக்கும். மார்பு தசைகள் விரிவடைவதில், நுரையீரல், இதயம் நன்கு செயல்பட இடமளிக்கிறது.கழுத்து பகுதி நீட்சி அடைவதால் , தைராய்டு சுரப்பிகள் நன்கு செயல்படுகிறது.
முதுகுவலி குணமாகும். கருப்பையின் செயல்பாடு, ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு sஒழுங்குபடுத்துகிறது .
ராஜகபோடசனம்:
rajakopadasanam :
செய்முறை :
Step1 : முதலில் விரிப்பின் மீது மண்டியிட்டு (வஜ்ராசன நிலையில் ) அமர்ந்து கொள்ள வேண்டும்.
Step 2 :
வஜ்ராசன நிலையில் இருந்து கொண்டே, பின்புறமாக மல்லாந்து படுக்கவும்.
Step 3 & 4 : பின் கைகளை காதுகளுக்கு அருகில் ஊன்றி ,உடலை வளைக்க வேண்டும்.
Step 5
& 6 : உடலை நன்றாக வளைத்து , இரு கைகளால் இரு கால்களின் கணுக்கால்களை பிடிக்க வேண்டும்
Step 7 : பின் தலையை பாதங்களில் படும் படி ஊன்ற வேண்டும்.
இவ்வாறு 10 எண்ணிக்கையில் ஆசன நிலையில் இருக்க வேண்டும். 3 முதல் 5 முறை செய்யலாம்.
பலன்கள்:
உடலின் முன் பகுதி, கணுக்கால், தொடைகள் மற்றும் இடுப்பு, வயிறு மற்றும் மார்பு மற்றும் தொண்டை முழுவதையும் நேராகவும், நீட்டவும் (stretches ) உதவுகிறது.இடுப்பு எலும்பு நன்கு இளக்கம் கொடுக்கும். பின்புற தசைகளை பலப்படுத்துகிறது.அடிவயிறு மற்றும் கழுத்தின் உறுப்புகளைத் தூண்டுகிறது.கீழ் மூட்டுகளின் தசைகள் மற்றும் மூட்டுகளை பலப்படுத்துகிறது. தொண்டையைச் சுற்றியுள்ள தசைகளை பலப்படுத்துவதால் சீரான சுவாசம் பெற்று ,ஆக்ஸிஜனை நன்கு சுவாசிக்க வழிவகை செய்கிறது. இரத்த ஓட்டத்தை சுத்திகரித்து ,இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.செரிமான பிரச்சனை நீங்குகிறது.நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.நரம்பு மண்டலம் நன்கு செயல் படும்.சிறுநீரக கோளாறுகள் நீங்கும்.உடல் மற்றும் மனதை அமைதி படுத்தி மனஅழுத்தத்தை நீக்குகிறது.





0 Comments