யோகாவின் நன்மைகள் - 22 | அதோ முக ஸ்சவனாசனம் & மகர அதோ முக ஸ்சவனாசனம் செய்முறை| #Weight Loss
அதோ முக ஸ்சவனாசனம்:
Adho Muga Svanasanam:
செய்முறை
1 :
முதலில் விரிப்பின் மீது மண்டியிட்டு அமர்ந்து கொள்ளவும். பின் முன்புறம் கைகளை ஊன்றி படத்தில் காட்டியுள்ளபடி நிற்கவும். பின்னர் மெதுவாக மூச்சை வெளியேற்றியவாறு இடுப்பை சற்று உயர்த்தி, கைகளை முன்புறமாகவும், முழங்கால்களை பின்புறமாகவும் நீட்டி ‘V’ வடிவில் நிற்க வேண்டும். கைகள் இரண்டும் தோள்பட்டைகளை.ஒட்டியும், கால்கள் இரண்டும் ஒட்டியும் இருப்பது நல்லது. தலையை குனிந்து பாதங்களை பார்த்தவாறு நிற்க வேண்டும். 10 வினாடிகள் ஆசன நிலையில் இருந்து பின் கலைக்கலாம். 3 முதல் 5 முறை செய்யலாம்.
செய்முறை 2:
முதலில் விரிப்பின் மீது குப்புறப்ப படுக்கவும். பின் கைகளை முன்புறமாக ஊன்றி ,மூச்சை வெளியேற்றியவாறு இடுப்பை சற்று உயர்த்தி கால்களை பின்புறமாக நீட்டி ‘V’ வடிவில் நிற்க வேண்டும். கைகள் இரண்டும் தோள்பட்டைகளை ஒட்டியும், கால்கள் இரண்டும் ஒட்டியும் இருப்பது நல்லது. தலையை குனிந்து பாதங்களை பார்த்தவாறு நிற்க வேண்டும். 10 வினாடிகள் ஆசன நிலையில் இருந்து பின் கலைக்கலாம். 3 முதல் 5 முறை செய்யலாம்.
செய்முறை 3 :
விரிப்பின் மீது கால்களை ஒட்டியாறு நேராக நிமிர்ந்து நின்று கொள்ளவும்.பின் முன்புறமாக குனிந்து கைகளை தரையில் ஊன்றவும். பின் கால்களை பின்புறமாக நீட்டி ,இடுப்பை சற்று உயர்த்தி V’ வடிவில் நிற்க வேண்டும். கைகள் இரண்டும் தோள்பட்டைகளை ஒட்டியும், கால்கள் இரண்டும் ஒட்டியும் இருப்பது நல்லது. தலையை குனிந்து பாதங்களை பார்த்தவாறு நிற்க வேண்டும். இவ்வாறு 3 முறைகளில் இவ்வாசனத்தை செய்யலாம்.
பலன்கள்
தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது, இது உங்கள் தலைமுடிக்கு ஊட்டச்சத்துக்களை வழங்க உதவுகிறது.முடி உதிர்தல், முடி நரைத்தல் மற்றும் வழுக்கை பிரச்சினைகளையும் தீர்க்க முடியும்.தலைக்கு ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் கண், காது உறுப்புகள் நன்கு மேம்படும். பருக்கள் மற்றும் கறைகள் இல்லாத ஆரோக்கியமான, ஒளிரும் முகசருமத்தைப் பெறலாம். நியாபக சக்தியை அதிகரிக்கிறது,
செரிமான பிரச்சினைகள், வாயு மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளைச் சரி செய்கிறது. மன அழுத்தம், மனச் சோர்வு நீங்கி மன அமைதி கிடைக்கிறது.பிட்யூட்டரி சுரப்பி ,இன்சுலின்,கணையம் போன்ற உறுப்புகள் நன்கு செயல் படுகிறது,இரவில் நன்றாக தூங்க உதவும்.கைகளும் தோள்பட்டைகளும் இணையும் இடங்களில் உண்டாகும் உராய்வினால் வரும் வலிகள் நீங்குகிறது.
மகர அதோ முக ஸ்வனாசனா
அல்லது டால்பின் ப்ளாங்க்
ஆசனம்:
Makara Adho Muga
svanasana
செய்முறை:
முதலில் விரிப்பின்
மீது குப்புறப்படுத்து கொள்ள வேண்டும். இரு முழங்கைகளையும் படத்தில் கட்டியுள்ள படி
தரையில் ஊன்ற வேண்டும். பின் மூச்சை ஆழமாக இழுத்து விட்டு, உள்ளங்கை தரையில் படுமாறு
செய்து உடலை மேலே தூக்க வேண்டும்.படத்தில் காட்டியுள்ளபடி கால் பாத விரல்களால் உந்தியவாறு உடலை மேலே தூக்க
வேண்டும்.உடல் பாரம் முழுவதும் முழங்கைகள் தாங்கியவாறு இருக்க வேண்டும்.உடல் பாகம்
தரையில் படக்கூடாது. 10 எண்ணிக்கை வரை ஆசன
நிலையில் இருந்து பின் ஆசனத்தை கலைக்கலாம். 2 அல்லது 3 முறை செய்யலாம். டால்பின் போன்று
தோற்றம் கொண்டுள்ளதால் இவ்வாசனம் டால்பின் பிளாங் ஆசனம் எனவும் அழைக்கப்படுகிறது.
பலன்கள்
மொத்த பேலன்ஸையும்,
கைகளில் தாங்காமல், புஜத்தில் தாங்குவதால் கைகள்,தோள்கள் மிகவும் வலுப்பெறும்.வயிறு,
மற்றும் மார்பை பலப்படுத்துகிறது.
மன அழுத்தம் மற்றும்
லேசான மனச்சோர்வை நீக்குகிறது.
உடலும் தரையில் படாமல்
தம் பிடித்து செய்வதால், அடிவயிற்றில் இருக்கும் கொழுப்புகள் கரைந்து தட்டையான வடிவம்
பெறும்.பின்புற தசைகளை வலுப்படுத்துகிறது. மொத்த உடலுக்கும் சீராக ரத்தம் பாய்ந்து
புத்துணர்ச்சி பெறும். முதுகுவலி மற்றும் உடல்வலி நீங்கும். கால் தசைகள் இறுகும். அஜீரணத்தை
நீக்கி ,செரிமானத்தை மேம்படுத்துகிறது.முதுகெலும்பை பலப்படுத்துகிறது.


0 Comments