யோகாவின் நன்மைகள் - 22 | கருடாசனம் & வட்டயனாசனம் செய்முறை-பலன்கள்| #Weight Loss


கருடாசனம் 

Garudasanam:

 

செய்முறை :

    


முதலில் விரிப்பின் மீது நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும். பின் உடலையும் மனதையும் ஒருங்கிணைத்து வலது காலை உயர்த்தி இடது முழங்கால் வழியாக கொண்டு சென்று , இடது காலின் கணுக்கால்களை படத்தில் காட்டியுள்ளபடி  பின்னி கொள்ள வேண்டும். பின் கைகளை பக்கவாட்டில் நேர்கோட்டில் நிமிர்த்தி படத்தில் காட்டியுள்ளபடி வலது கை மேலாகவும் இடது கை கீழாகவும் இருக்கு  படி பின்னிக் கொள்ளவும். பார்வை கைவிரல்களை நோக்கி இருக்க வேண்டும்.  மெதுவாக மூச்சை இழுத்து விட வேண்டும். 5 முதல் 10 வினாடி வரை ஆசன நிலையில் இருந்து மெதுவாக ஆசனத்தை கலைக்கலாம் . பின் கால் கைகளை மாற்றி செய்ய வேண்டும்.

பலன்கள்

உடம்பையும் , மனதையும் பெலப்படுத்துகிறது, இடுப்பு எலும்புகள் , தொடைகள் , தோள் பட்டை எலும்புகள் , கணுக்கால்கள் போன்ற பகுதிகள் நன்கு இளக்கம் பெற்று பலம் பெறுகிறது, தொடை பகுதி, கெண்டைக்கால்  பகுதியில் உள்ள அதிகப்படியான சதைகளை குறைகிறது, மூட்டுவாதம் நீங்குகிறது,நரம்பு மண்டலம் பலம் பெறும். நியாபக சக்திக்கு சிறந்த ஆசனம் இது,ஆஸ்துமா , முதுகு வலி, சிறுநீரக பிரச்னைகளை சரி செய்கிறது, கால்களின் தசைப் பிடிப்பு முற்றிலும் நீங்குகிறது. கால்கள் , கணுக்கால்கள் , கெண்டைக்கால் நன்கு பலம் பெறுகிறது.

வட்டயனாசனம்

vattayanasanam

செய்முறை 1:



விரிப்பின் மீது நேராக நின்று கொள்ளவும். பின் இடது காலை மடக்கி வலது தொடையின் மேல் படும் படி வைத்து,ஒரே காலில் நிற்கவும். பின் கைகளை தரையில் ஊன்றி , வலது பக்க காலை மெதுவாக மடக்கி, படத்தில் காட்டியுள்ளபடி  மடக்கப்பட்டுள்ள இடது காலின் முழங்காலை தரையில் ஊன்றவும். வலதுகாலை நேராக ஊன்றவும். பின் கைகளை படத்தில் காட்டியுள்ளபடி  இடது கை மேலாகவும் வலது கை கீழாகவும் இருக்கு  படி பின்னிக் கொள்ளவும். மெதுவாக மூச்சை இழுத்து விட வேண்டும். 5 முதல் 10 வினாடி வரை ஆசன நிலையில் இருந்து மெதுவாக ஆசனத்தை கலைக்கலாம் .இவ்வாறு 3 முதல் 5 முறை செய்யலாம். பின் கால் கைகளை மாற்றி செய்ய வேண்டும்.

செய்முறை 2:



விரிப்பின் மீது முழங்கால்களை மடக்கி மண்டியிட்ட நிலையில் அமர்ந்து கொள்ள வேண்டும். பின் இடது முழங்காலை படத்தில் காட்டியுள்ளபடி  தரையில் ஊன்றி , வலது முழங்காலின் பாதங்களை இடது காலின் தொடையில் வைத்து  மண்டியிட்ட நிலையிலே தரையில் ஊன்றவும்.படத்தில் காட்டியுள்ளபடி வலது கை மேலாகவும் இடது கை கீழாகவும் இருக்கு  படி பின்னிக் கொள்ளவும். மெதுவாக மூச்சை இழுத்து விட வேண்டும். 5 முதல் 10 வினாடி வரை ஆசன நிலையில் இருந்து மெதுவாக ஆசனத்தை கலைக்கலாம் .இவ்வாறு 3 முதல் 5 முறை செய்யலாம். பின் கால் கைகளை மாற்றி செய்ய வேண்டும்.

பலன்கள்

கால்களை வலுப்படுத்தும் பயிற்சியாகும் , இடுப்பு அல்லது கீழ் மூட்டுகளில் உள்ள சிறிய குறைபாடுகளை குணப்படுத்த முடியும்.உடல் எலும்புகளை வலுப்படுத்த இந்த பயிற்சியைப் பயன்படுத்தலாம். கீழ் வாதம் முற்றிலும் நீங்கும். குடலிறக்க பிரச்சனையை சரி செய்யும்.கால் மூட்டுகள் , தொடை பகுதிகள், கணுக்கால் பகுதிகள் பலம் பெறும்.

 

For More Details : Subscribe and Like Our Channel 

(Rehoboth Cyrus Uzhagam)

https://youtu.be/nW0W6YjoFu8