யோகாவின் நன்மைகள் - 21 | பத்ம சுப்த வஜ்ஜிராசனம் & பத்ம புஜங்காசனம் செய்முறை-பலன்கள்| #Weight Loss




பத்ம சுப்த வஜ்ஜிராசனம் :

Padma subtha  vajirasanam :

செய்முறை:



  முதலில் விரிப்பில்  அமர்ந்து பத்மாசனம் செய்ய வேண்டும்.  பத்மாசன நிலையில் இருந்து கொண்டே மல்லாந்து படுக்கவும். பின் படத்தில் காட்டியுள்ள படி , கைகளை தலைக்கு பின்னால் ஊன்றி , முதுகை வளைத்து தலையை தரையில் ஊன்ற வேண்டும். பின் கைகளால் இருகால்களின் பெரு விரல்களை பிடித்து , முழங்கையை தரையில் ஊன்றவும். இந்த ஆசனம் பத்மாசனம் மற்றும் சுப்த வஜ்ஜிராசனம் இரண்டும் சேர்ந்த நிலையில் இருப்பதால் இவ்வாசனம் பத்ம சுப்த வஜ்ஜிராசனம் எனப்படுகிறது. ஒரு முறைக்கு 5 முதல் 10 வினாடியாக 3 முதல் 4 முறை செய்யலாம்.

 பலன்கள்:

 கழுத்து வலி, முதுகு வலி நீங்குகிறது, முதுகெலும்பு பலப்படும். மார்பு விரிந்து நுரையீரல் நன்கு வேலை செய்யும். ஆஸ்துமா, இருமல், மார்புச்சளி நீங்கும்.   வயிற்று பகுதி இழுக்கப்படுவதால் தொப்பை கரைகிறது. அஜீரணம், மலச்சிக்கல் நீங்குகிறது. கர்ப்பப்பை உறுப்புகள் பலம் பெறும்

                பத்ம புஜங்காசனம் :

                    Padma Bujangasanam:

செய்முறை:

 



முதலில் விரிப்பில் குப்புறப் படுத்துக் கொள்ளவும். பின் படுத்த நிலையில்  இரு பாதங்களையும் மடக்கி பத்மாசனம் செய்ய வேண்டும்.பின் படத்தில் காட்டியுள்ள படி , கைகளை தலைக்கு தரைக்கு அருகில் ஊன்றி , தலையை   காலத்துக்கு பின் வளைக்கவும். பின்  முதுகை வளைக்க வேண்டும்.இந்த ஆசனம் பத்மாசனம் மற்றும் புஜங்காசனம் சேர்ந்த நிலையில் இருப்பதால் இவ்வாசனம் பத்ம புஜங்காசனம் எனப்படுகிறது. ஒரு முறைக்கு 5 முதல் 10 வினாடியாக 3 முதல் 4 முறை செய்யலாம்.

 பலன்கள்: 

   வயிற்று பகுதி இழுக்கப்படுவதால் நன்கு ரத்த ஓட்டம் ஏற்படுகிறது. தொப்பை கரைகிறது. அஜீரணம், மலச்சிக்கல் நீங்குகிறது.  கழுத்து வலி, முதுகு வலி நீங்குகிறது, முதுகெலும்பு பலப்படும். மார்பு விரிந்து நுரையீரல் நன்கு வேலை செய்யும். விலா எலும்புகள் பலம் பெறும். ஆஸ்துமா நோய்க்கு மிக முக்கியமான ஆசனம் இது.


For More Details : Subscribe and Like Our Rehoboth Cyrus Uzhagam Channel

https://youtu.be/FguyqSzfwOE