யோகாவின் நன்மைகள் - 20 | பத்த பத்மாசனம் & கோமுக ஆசனம் செய்முறை-பலன்கள்| #Weight Loss


பத்த பத்மாசனம் :

Baddha padmasanam :

செய்முறை:


  முதலில் விரிப்பின் மேல் அமர்ந்து பத்மாசனம் செய்ய வேண்டும். பின் மூச்சை வெளியிட்டு, கைகளை முதுகுப்புறம் கொண்டு சென்று , படத்தில் காட்டியுள்ள படி, இடது கையால் இடது கால் பெரு விரலையும், வலது கையால் வலது கால் பெரு விரலையும் பிடிக்க வேண்டும்.இந்த ஆசனம் செய்யும் போது எளிதில் கால் விரல்களை பிடிக்க வராது.பத்மாசனத்தில் அமரும் போது வலது கால் மேலிருந்தால், இடது பக்கம் சாய்த்து வலது கால் பெரு விரலை பிடிக்கவும். பின் நிமிர்ந்து வலது பக்கம் சாய்ந்து இடது கால் பெரு விரலை பிடிக்கவும்.  4 முதல் 10 வினாடிவரை ஆசன நிலையில் இருக்கவும். 3 முதல் 4 முறை செய்யலாம்.

பலன்கள்:

  புஜம்,தோள் பட்டை, முதுகு வலி நீங்கும். பெண்கள் மார்பகம் தளர்ச்சி அடைவதை தடுக்கும். புஜம், முழங்கை, மார்பு. மணிக்கட்டு , வை விரல்கள் பலம் பெறும். சுவாச கோளாறுகள் நீங்கும். 

 

கோமுக ஆசனம்:

Komuga Asanam :

செய்முறை :


விரிப்பில் கால்களை நீட்டியபடி உட்காரவும். இடது கையால் வலது காலைப் பிடித்து, இடது காலின் தொடைக்கு மேலே கொண்டு வந்து, பின் தொடைக்கு அருகே தரையில் வைக்கவும்.பின் இடது காலை மடக்கி, வலது தொடைக்கு கீழ் வைக்கவும். இரு கால்களின் மூட்டுகளும் ஒன்றன்மேல் ஒன்றாக நன்றாக இணைந்திருக்க வேண்டும்.படத்தில் காட்டியுள்ள படி, வலது கையை மேலே உயர்த்தி, முதுகுக்குப் பின்னே கொண்டு சென்றுஇடது கையை அடி முதுகின் வழியாக, உடம்பிற்கு பின்னே கொண்டு செல்லவும். பின் இரு கைகளும் கோர்த்து கொள்ள வேண்டும். முதுகு நேராக இருக்க வேண்டும். ஆசன நிலையில் 20 எண்ணிக்கையில் இருக்க வேண்டும். . இவ்வாறு நான்கு முறை செய்யலாம்.பின் கால், கைகளை மாற்றிச் செய்யவும்.இந்த ஆசனத்தில் வலது கால் மேலே இருக்கும்போது, வலது கையும், இடது கால் மேலே இருக்கும்போது, இடது கையும் மேலே இருக்க வேண்டும்.

பலன்கள் :

  நன்கு பசியுணர்வு ஏற்படும். அஜீரணம், மலச்சிக்கல் நீங்கும். நுரையீரல், மார்பு, இதயம் பலம் பெறுகின்றது. கை, கால், தோள் பட்டை வலி நீங்கும்

தூக்கமின்மை, கூன்முதுகு,தலைவலி நீங்கும். நீரழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் நீங்கும்.

For More Details : Click Link Below (Subscribe and Like Our Rehoboth Cyrus Uzhagam)

https://youtu.be/AK5nNwxfjCk