யோகாவின் நன்மைகள் -19 | பத்த கோணாசனம் & பட்டர் பிளை ஆசனம்செய்முறை-பலன்கள்| #Weight Loss
பத்த கோணாசனம்: (பட்டர் பிளை ஆசனம்)
Patha konasanam (Butterfly asanam)
முதலில் விரிப்பின் கால்களை நேராக நீட்டி அமர்ந்து கொள்ளவும். முதுகு
தண்டு வளையாமல் நேராக நிமிர்ந்து அமர்ந்து மூச்சை உள்ளிழுக்கவும். பின் இரு முழங்கால்களையும் மடக்கி, இரு கால்களின் கணுக்கால்களையும் இழுத்து படத்தில் காட்டியுள்ளபடி அடிவயிற்றை ஒட்டியவாறு இருக்கும் படி அமைக்கவும். இரு கைகளினால் இரு பாதங்களையும் பிடித்து கொள்ளவும். பின் கால்களை ஏற்றி இறக்கவும். கால்களை ஏற்றி இருக்கும் போது பட்டர்பிளை போன்று காணப்படுவதால் இவ்வாசனம் பட்டர்பிளை ஆசனம் எனவும் அழைக்கப்படுகிறது. 3 முதல் 5 வினாடி வரை ஆசன நிலையில் இருக்கவும். 3 முதல் 4 முறை செய்யலாம்.
பலன்கள்:
வயிற்று பகுதி உறுப்புகள் நன்கு செயல் பட உதவி செய்கிறது. பெண்களின் கர்ப்பப்பை பிரச்சனைகளை சரி செய்வதற்கு மிக சிறந்த ஆசனம் இது. கர்ப்பப்பை நீர்க்கட்டி (Pcod ) முற்றிலும் நீங்க செய்கிறது.
. பெண்கள் கருவுற்ற காலத்தில் இவ்வாசனம் தொடர்ந்து செய்து வந்தால்,
பெல்விஸ் எலும்புகள் இளக்கம் பெறுவதால் சுகபிரசவம் ஏற்பட வழிவகை செய்கிறது.
கந்தபீடாசனம் :
Kandhapeedasanam:
செய்முறை :
முதலில் விரிப்பின் கால்களை நேராக நீட்டி அமர்ந்து கொள்ளவும்.
முதுகு தண்டு வளையாமல் நேராக நிமிர்ந்து அமர்ந்து மூச்சை உள்ளிழுக்கவும். பின் இரு முழங்கால்களையும் மடக்கி, இரு கால்களின் கணுக்கால்களையும் இழுத்து படத்தில் காட்டியுள்ளபடி அடிவயிற்றை ஒட்டியவாறு இருக்கும் படி அமைக்கவும்.பின் பாதங்களை லேசாக திருப்பி இரு கைகளாலும் பாதங்களை பிடித்து படத்தில் கட்டியுள்ள படி வயிற்றுக்கும் , விலாஎலும்பிற்கும் இடையையில் இருக்கும் படி பெறுத்த வேண்டும். விரிந்த கால்கள் சற்று உள்நோக்கி வரும். முழங்கால்கள் தரையில் இருக்க வேண்டும். பின் கைகைகளை சின் முத்திரையில் வைக்க வேண்டும். 3 முதல் 5 வினாடி வரை ஆசன நிலையில் இருக்கவும். 3 முதல் 4 முறை செய்யலாம்.
பலன்கள் :
வயிற்று பகுதி உறுப்புகள் நன்கு செயல் பட உதவி செய்கிறது. அஜீரணம் , மலச்சிக்கல் நீங்குகிறது. தொப்பை கரைகிறது. கால்கள் நன்கு வலு பெறுகிறது. இடுப்பு எலும்புகள் பலம் பெறுகிறது,
For More Details : Click Link Below (Please subscribe and Like Our Channel)
https://youtu.be/LaWlo9q-_NE


0 Comments