வேலைக்காரியின் மனசு

 

காயல்பட்டிஎன்ற கிராமத்தில் பவானி என்ற ஒரு பெண் இருந்தாள்அவள் சிறுவயதிலே தாய் தந்தையை இழந்தவள்பாட்டி அரவணைப்பில் இருந்து வளர்ந்து வந்தாள்அவள் சிறுவயதில் இருந்தே வீட்டு வேலை செய்து தன் பாட்டியை கவனித்து வந்தாள்குடும்பத்தின் வறுமை காரணமாக அவளால் பள்ளிக்கு செல்ல முடியவில்லைஅவள்  வளர்ந்து வாலிப பருவத்தை அடைந்தாள்சிறுவயதில் இருந்தே கஷ்டப்பட்டு வளர்ந்ததால்திருமணமாவது நன்றாக அமைய வேண்டும் என்று எதிர்பார்த்தாள் பவானிஆனால் அதிலும் அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியதுஏனென்றால்அவளுக்கு அமைந்த வரமோஒரு குடிகார கணவன்அவளுக்கு திருமணம் முடிந்த சிறிது காலத்தில் அவளது பாட்டி இயற்கை எய்தினார்கணவன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலே குடித்து வந்தான்பவானி மறுபடியும் வீட்டு வேலை செய்ய ஆரம்பித்தாள்இவள் கொண்டு வரும் பணத்தை எல்லாம் இவளது கணவன் குடித்தே அழித்தான்இதற்கிடையில் பவானிக்கு  ஒரு பெண் குழந்தை பிறந்ததுதன் குழந்தையை பார்த்தாவதுதன் கணவன் திருத்துவார் என்று எதிர் பார்த்தாள்அதிலும் ஏமாற்றமே மிஞ்சியதுமீண்டும் பவானிக்கு ஒரு பெண்குழந்தை பிறக்கவேஅவள் தன் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து மிகவும் கவலைப்பட்டாள்நான்தான் படிக்க முடியவில்லைஎனது குழந்தைகளாவது நன்றாக படிக்க வேண்டும் என்று சிந்தித்து கொண்டிருக்கையில்பவானியின் தோழி, வீட்டுக்கு வந்தாள்அவளது தோழி அவளிடம்ஏய் என்னடி இப்படி சோகமாக உட்காந்து இருக்க.என்ன ஆச்சுஎன்று கேட்டாள்அதற்கு பவானிநான்தான் சிறுவயதுஇருந்தே

கஷ்டபட்டு வளர்ந்தேன்என் திருமண வாழ்க்கையாவது நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்அதுவும் எனக்கு தோல்வியாக முடிந்ததுஎன் கணவனுக்கு குடும்பத்தை குறித்து கவலையே இல்லைஇரண்டு பெண் பிள்ளைகளை எப்படி வளர்க்க போகிறேன் என்று கவலையுடன் கூறினாள்.இதை கேட்ட அவளது தோழிஒரு ஐடியா கொடுத்தாள்.

பவானிஎனக்கு தெரிந்த ஒரு தரகர் இருக்கிறார்அவர் வெளிநாட்டிற்கு பெண்களை வீட்டு வேலைக்கு அனுப்புகிறார்உனக்கு இஷ்டம் இருந்தா சொல்லு அவரது ஆபீஸ் முகவரியை தருகிறேன்.. நீ போய் நேரில் சந்தித்து பேசு என்றாள்ஆனாலும்என்று இழுத்தாள், ,,,,

ஏண்டி நிறுத்திட்டசொல்ல வந்ததை சொல்லுடி என்று கூறினாள் பவானிஇருபது வருடம் நீ அங்கு வேலை செய்ய வேண்டும்உன் குழந்தைகளை பிரிந்து செல்ல வேண்டியது இருக்கும் என்று கூறினாள்.

இந்த வார்த்தைகளை கேட்ட பவானி மிகவும் கலங்கினாள்ஏனென்றால்,ஒரு குழந்தைக்கு வயது ஐந்து.. இன்னொரு பெண் பிள்ளை வயது இரண்டு.

நீ யோசித்து  சொல்லு என்று கூறி விட்டு அவ்விடம் விட்டு சென்றாள் பவானியின் தோழி.

இரண்டு நாட்கள் யோசித்த பிறகுதன் முடிவைகணவனிடம் கூறினாள் பவானிமிகவும் கனத்த இதயத்துடன்நான் வெளிநாட்டில் செல்கிறேன்அங்கும் வீட்டு வேலைதான் செய்ய போகிறேன் என்று கூறினாள்அவள்தன் கணவன் போக வேண்டாம்னு சொல்லுவார் என்று எதிர்பார்த்தாள்ஆனால் அவனோநீ போய்ட்டு வாநான் பிள்ளைகளை கவனித்து கொள்கிறேன்பணம் மட்டும் தவறாமல் அனுப்பி விடு என்று கூறினான்.  இந்த வார்த்தைகளை கேட்டதும் பவானி கலங்கினாள்.

பவானி தன் கணவனிடம்,  நான் போறதை குறித்து உங்களுக்கு கவலை இல்லையாஎன்று கேட்டாள்அதற்கு அவன்எனக்கு கவலை எல்லாம் ஒண்ணும்இல்லை . பணம் மட்டும் தவறாம அனுப்புவேன் என்று சத்தியம் பண்ணி கொடுஎன்று சத்தியம் வாங்கினான்.

ஒரு பெண்ணுக்கு கணவனின் அன்பு இருந்தாலேஅந்த பெண் எதையும் சாதிக்க முடியும்ஆனால் பவானிக்கு அந்த அன்பு கூட கிடைக்கவில்லை

 

கனத்த இதயத்துடன்மறுநாள் காலையில் எழுந்து தரகரை சந்தித்தாள்... மிகவும் பாரத்துடன் இரண்டு பெண் பிள்ளைகளை முத்தம் செய்துவிட்டுவெளிநாடு கிளம்பினாள் பவானி.

தரகர் கூறிய வீட்டிற்கு வேலைக்கு வந்தாள் பவானிஅங்கு ஒரு நடுத்தர வயது கொண்ட பெண்மணி இருந்தாள்அந்த பெண்மணிபவானியின் பாஸ்போர்ட்  முதலிலே பிடுங்கி வைத்து கொண்டாள்.

 

அங்கு மிகவும் கஷ்டப்பட்டாள் பவானிஒரு வேலை உணவுதான் கிடைக்கும் அதுமட்டுமில்லாமல் அந்த நடுத்தர வயது பெண்மணி அடிக்கவும்உதைக்கவும் செய்தாள்நாட்களை கண்ணீரோடு கழித்து வந்தாள் பவானிதன் பிள்ளைகளுக்காக எல்லாவற்றையும் பொறுத்து கொண்டாள்..

பவானியின் பிள்ளைகள்தன் அம்மா வேண்டும் என்று அழத்தொடங்கினர்பவானியின் கணவன்உன் அம்மா இனிமே வர மாட்டாள்அவள் வேற ஒருத்தன் கூட போய் விட்டாள் என்று கூறி வளர்த்தான்பிள்ளைகளும்  அம்மா மீது வெறுப்பாக வளர்ந்தது.

பவானி மிகவும் மெலிந்து காணப்பட்டாள்.  20 வருடங்களுக்கு பிறகுபவானி இந்தியா  வருவதாக தகவல் அனுப்பினாள்விமானத்தில் ஏறிய பிறகுஅவளது மனம் மிகவும் சந்தோசமாக களிகூர்ந்து இருந்ததுஎன்  பிள்ளைகளை  நான்  20 வருடத்திற்கு பிறகு பார்க்கப்போகிறேன்என் பிள்ளைகள் வளர்ந்து இருப்பார்கள்,  ஏர்போர்ட்டில் நம்மை வரவேற்க கணவனும்என் பிள்ளைகளும் வருவார்கள்என் பிள்ளைகள் என்னை பார்த்ததும் அம்மா என்று கட்டி பிடித்து முத்தம் கொடுப்பார்கள்.நன்றாக படித்து பெரிய ஆளாக மாறி இருப்பார்கள் என்று சிந்தித்து கொண்டிருந்தாள்.

ஏர்போர்ட்டில் தன் கணவனும்பிள்ளைகளும் காத்து கொண்டிருப்பார்கள் என்று நினைக்கும் பொழுது அவள் மனம் குதூகலித்ததுஇந்த விமானம் எப்பொழுது இந்தியா வந்தடையும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்தாள்தான் பட்ட கஷ்டம் எல்லாம்இன்றோடு முடிவடைய போகிறது என்று சிந்தித்தாள்விமானமும் மதுரை வந்ததுவேகமாக வெளியே வந்து தன் கணவனையும் , பிள்ளைகளையும் தேடினாள்ஆனால்யாருமே வரவே இல்லைஅவள் இருதயம் நொறுங்கியதுஇருந்தாலும்தன் மனதை தேற்றி கொண்டு , அவர்களுக்கு வேற எதாவது வேலை இருக்கும்அதான் வர முடியவில்லைநான் என் வீட்டிற்கு சென்று அவர்களை பார்க்கிறேன் என்று சிந்தித்து கொண்டே வீட்டை நோக்கி போனாள்..

வீட்டுக்கு போனதும்பிள்ளைகளும்,கணவனும் டிவி பார்த்து கொண்டு சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்வீட்டுக்குள்ளே போனதும்அவளது முதல் மகள்அவளை பிச்சைக்காரி என்று நினைத்துஏய்பிச்சைக்காரிஉனக்கு அறிவு இல்லையாஇப்படிதான் திறந்த வீட்டுக்குள் நாய் நுழைந்த மாதிரி வருவியாஎன்று கத்தினாள்.

பவானி பேச அவள் சிறிதும் இடம் கொடுக்கவில்லைவெளியே துரத்தினாள்.

பவானிமகளே !  உன் அம்மா எப்படி இருக்கிறார்?.

என்று பொறுமையாக கேட்டாள்

அம்மா என்ற வார்த்தையை கேட்டதும் மிகவும் கோபம் அடைந்தாள் பவானியின் மூத்த மகள்எனக்கு அம்மாவே கிடையாதுஅவள எனக்கு பிடிக்காதுஅவள் வேற ஒருத்தன் கூட ஓடிபோய்ட்டாஅவளை பத்தி பேசாத என்ற வார்த்தைகளை கேட்டதும்  மிகவும் மனம் உடைந்து போனாள்.

பவானி மிகவும் மெலிந்து காணப்பட்டதால் அவள் கணவனுக்கு கூட அடையாளம் தெரியவில்லை.

பவானி மனதை திடப்படுத்திக்கொண்டுஉன் அம்மா மோசம் என்று யார் கூறியதுஎன்று கேட்டாள்.

அதற்கு அவளது மகள்எனது தந்தை கூறினார்நங்கள் சிறுவயதில் இருக்கும் போதே என் அம்மா வேற ஒருத்தனோட ஓடி போய் விட்டாள்எனது தந்தை எங்களை மிகவும் கஷ்ட பட்டு வளர்த்தார்எங்கள் நிலைமையை அறிந்த சிலர் வெளிநாட்டில் இருந்து எங்களுக்கு பணம் அனுப்புவதாகவும்அந்த பணத்தை வைத்து தான் நாங்கள் இன்று படித்து நல்ல நிலைமையில் இருப்பதாகவும்என் அம்மாவை   நினைத்துதான் என் அப்பா குடிகாரராக மாறிப்போனார் என்றும்  கூறினாள்இந்த வார்த்தைகளை கேட்டதும்பவானி மிகவும் அழுதாள்.  எப்படி தன் பிள்ளைகளுக்கு தன்னை தெரியப்படுத்துவது என்று கலங்கி திகைத்து கொண்டிருக்கையில் பவானியின் தோழி அங்கு வந்தாள்

யார் கைவிட்டாலும்ஆண்டவர் நம்மை கைவிடுவதில்லை என்ற சொல்லுக்குகேற்ப பவானியின் தோழி அங்கு வந்தாள்.

அவளுக்கும் பவானியை அடையாளம் தெரியவில்லைஅவள் யார் என்று விசாரித்தாள்அப்பொழுது பவானியிடம் கூறிய வார்த்தைகளை மூத்த மகள்பவானியின் தோழியிடமும் கூறினாள்இதை கேட்டதும்பவானியின் தோழி கோவப்பட்டாள்.

வாயை மூடுடிஉன் அம்மா எவ்வளவு நல்லவள் தெரியுமா?. அவள் சிறுவயதிலே அவளது அம்மாஅப்பா இல்லாமல் பாட்டியிடம் வளர்ந்தாள்சிறுவயதிலே அவளுக்கு தாய்தகப்பன் அன்பு கிடைக்கவில்லைசரிகல்யாணமாவது நமக்கு நன்றாக கிடைக்கும் என்று எதிர்பார்த்தாள்உன் அப்பா  மிகபெரிய குடிகாரன்அவன் வேலைக்கே செல்லவில்லைஇதற்கிடையில் இரண்டு பெண் பிள்ளைகளை பெற்றாள்.. தன்னை போல தன் பிள்ளைகள் கஷ்டப்பட கூடாது என்று அவள் மனதை கல்லாக்கி கொண்டுஉங்களுக்காக வெளிநாடு சென்று இருக்கிறாள்நீங்கள் நினைக்குற மாதிரி இந்த பணம் யாரோ அனுப்பலஉன் அம்மா கஷ்டப்பட்டு அனுப்புறதுநீ போட்டு இருக்குற டிரஸ்சாப்பிடுற சாப்பாடுஇருக்குற வீடு எல்லாம் அவள் கொடுத்ததுஉன் அப்பா இதுவரைக்கும் வேலைக்கே போகலஅவன் குடிக்கிறதுக்கு ஒரு காரணம் உங்ககிட்ட சொல்லணும்அதான் என் பொண்டாட்டி ஓடி போய்ட்டா னு காரணம் சொல்லி குடிக்கிறான் . என்றாள்.

அப்பாவை, பிள்ளைகள் மதிக்க வேண்டும், உங்கள் தகப்பனை குறித்து ஏதும்  சொல்ல வேண்டாம், என்று என் தோழி சத்தியம் வாங்கி கொண்டாள். அதான் இவ்வளவு நாட்கள் நான் கூறவில்லை. ஆனால் எல்லாம் தெரிந்த உங்கள் தகப்பன், அம்மாவை பற்றி எவ்வளவு கேவலமாக சொல்லி இருக்கிறான்?

இதை கேட்டதும்பவானியின் பிள்ளைகள் மனமுடைந்து அழுதனர்ஐயோ என் அம்மாவை எவ்வளவு கேவலமாக நினைத்து விட்டோம்எங்க வீட்டு தேவதை நடத்தைல சந்தேகப்பட்டுட்டோமே என்று அழுதனர்இன்றைக்கு கூட என் அம்மா வருவதாக சொன்னார்கள்நாங்கள் தான்  போகவில்லைமுதலில் வாங்க நாம அம்மாவை போய் பார்க்கலாம், அம்மாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்  என்று கூறினாள்அப்பாவையும் திட்டினர்தகப்பன் கூனி குறுகி நின்றான்.

அப்பொழுது பவானியின் தோழிபவானியை நோக்கிநீங்க யாரம்மா என்று கேட்டாள்அவள் தன் தோழியை நோக்கிஎன்னைய இன்னுமா உனக்கு அடையாளம் தெரியவில்லைஎன்று கேட்டாள்அந்த குரல் பவானி என்று கண்டு பிடித்தாள் அவளது தோழி.பவானி எப்படி இருக்கிறாய் ? என்று கேட்டு விட்டுபிள்ளைகளை பார்த்துஇவள்தான் உங்க தாய் என்று அறிமுகப்படுத்தினாள். அம்மாவை கண்டதும், பிள்ளைகள் கட்டிப்பிடித்து  முத்தம் கொடுத்தனர். பவானியின் கணவனும் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டான். அதன் பிறகு பவானி தன் பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தாள். பவானி தான் பட்டகஷ்டம் நீங்கி சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்தாள்.