படித்ததில் பிடித்தது

ஒரு வீட்டில் கணவன் மனைவி ஒரு மகன் வசித்து வந்தனர். மனைவிக்கு உடல்நிலை சரி இல்லாமல் போகவே தன் மரண தருவாயில் கணவனை அழைத்து பேசினாள்.

மனைவி : என்னங்க, நான் இன்னும் சிறிது நாட்களில் இறந்து விடுவேன். நான் இறந்ததும் நீங்கள் தனியாக கஷ்டப்படாமல் மறுமணம் செய்து கொள்ள வேண்டும். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்,

அதென்னவெனில் என் கல்லறையின் 

மேலுள்ள ஈரம் காயும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும் என்று சொல்லி சத்தியம் 

வாங்கினாள்.

 

கணவனும்  மனைவிக்காக சத்தியம் செய்து கொடுத்தான்.

சிறிது நாட்களில் மனைவி இறந்து போனாள். மனைவிக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற வேறு திருமணம் செய்து கொள்ள தயாரானான். ஆனால் மனைவின் கல்லறை எப்பொழுதும் ஈரமாகவே இருந்தது.

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அடிக்கிற வெயிலில் எப்படி ஈரமாக இருக்க முடியும் என்று சிந்தித்து அதன் காரணத்தை அறிய விரும்பினான். அடுத்த நாள்   காலையில் எழுந்து மனைவியின் கல்லறை பக்கத்தில் ஒரு ஓரத்தில் ஒளிந்து கொண்டான். சிறிது நேரத்தில் அவனது மகன் இரண்டு வாலி நிறைய தண்ணி கொண்டு வந்து கல்லறை மேல்  ஊற்றினான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவன், தன் மகனிடம் வந்து, ஏன்டா அம்மா கல்லறை  மேல தண்ணி ஊற்றுகிறாய் என்று கேட்டான்? அதற்கு மகன், அம்மா இறப்பதற்கு முன்பு, என் கல்லறை எப்பவுமே ஈரமாக இருக்க வேண்டும் அது உன் பொறுப்பு. ஈரம் காய விட கூடாது என்று சத்தியம் வாங்கினாங்க. அதான் நான் அடிக்கடி வந்து தண்ணி ஊற்றுகிறேன் என்று கூறினான்.

இதைக்கேட்ட அவன் அதிர்ச்சி அடைந்தான். செத்தும்  கெடுத்தான் என்ற கதை தான் அவனுக்கு ஞாபகம் வந்தது. அடிப்பாவி மகளே! ஆசை கட்டி இப்படி மோசம் பண்ணிட்டாளே என்று மனதுக்குள் புலம்பினான்