படித்ததில்
வலித்தது
மனைவி இறந்த பிறகு தன் மகனுக்காக மறுமணம் செய்து கொண்ட தந்தை மகனிடம் கேட்டார்.
அப்பா : இப்போது இருக்கிற புதிய அம்மாவை உனக்கு பிடித்து இருக்கிறதா? என்று கேட்டான்.
மகன் : என் அம்மா என்னிடம் பொய் சொல்வார் . புதியதாக வந்திருக்கும் அம்மா என்னிடம் பொய் சொல்லவில்லை என்றான்.
அப்பா: "உன் அம்மா சொன்ன பொய் என்னவென்று கேட்டார்"
மகன்: நான் ஏதாவது சேட்டை பண்ணினால் உனக்கு இன்று சாப்பாடு கிடையாது என்று சொல்லுவாங்க. ஆனால் எனக்கு பசி எடுத்தவுடன் என்னை தூக்கி மடியில் உக்கார வைத்து பாசத்துடன் ஒவ்வொரு உருண்டையாக ஊட்டி விடுவார்.
இப்போதுள்ள அம்மாவோ, நான் சேட்டை பண்ணும்பொழுது, என்னை அடித்து உனக்கு சோறு கிடையாது என்று சொன்ன வார்த்தையை இரண்டு நாட்களாக காப்பாற்றுகிறார் என்றான்.
அப்பா: அவன் சொன்ன வார்த்தையின் வலிகளை புரிந்து கொண்டு உடனே ஹோட்டலுக்கு சென்று உணவு வாங்கி கொடுத்தார்.
கண்ணீருடன் சொல்கிறார், "அம்மாவுக்கு சமம் அம்மா மட்டுமே"
இந்த உலகத்தில் எத்தனை புதிய உறவுகள் வந்தாலும் அம்மாவுக்கு நிகர் இல்லை.
0 Comments