யோகாவின் நன்மைகள் -14 | உத்தான பாத ஆசனம் & நவாசனம் செய்முறை-பலன்கள்| #Weight Loss



உத்தானபாத ஆசனம்

Utthana patha asanam

செய்முறை:

நேராக நிமிர்ந்து படுத்த நிலையில் கைகளைக் குப்புற மூடியவாறு படத்தில் காட்டியபடி பக்கவாட்டில் உடம்பை ஒட்டிய நிலையில் வைத்துக் கொள்ளவும். இரண்டு கால்களையும் சாதாரண நிலையில் தரையில் இருந்து அரை அடி மட்டும் மிக மெதுவாக உயர்த்தி சிறிது நேரம் நிறுத்தி மெதுவாக இறக்கவும். சாதாரண மூச்சுடன் செய்தல் வேண்டும். ஆரம்ப காலத்தில் மூச்சு பிடிக்க நேரிடும். ஒரு முறைக்கு 20 வினாடியாக 2 முதல் 4 முறை செய்யவும்.

 

குறிப்பு:

   உத்தான பாத ஆசனத்தை 2 நிலைகளில் செய்யலாம்.

முதல் நிலை:

   கால்கள் 1 அடி முதல் 2 அடி உயரலாம்

இரண்டாம் நிலை:

   கால்களை 4 முதல்அடி உயர்த்தலாம்.

 

பலன்கள்:

அடி வயிறு இறுக்கம் கொடுக்கும். தொந்தி கரையும். ஜீரண உறுப்புகள் இறுக்கம் பெற்று நன்கு வேலை செய்யும். உச்சி முதல் பாதம் வரையுள்ள அத்தனை நாடி நரம்புகளும் தூண்டப் பெறும். வாயு உபத்திரவம் நீங்கும். பெண்கள் மகப்பேறுக்குப் பின் இவ்வாசனம் செய்தால் தொந்தி விழுவது நீங்கி வயிறு சுருங்கும்.  

நவாசனம்

Navaasanam

செய்முறை :




 

  நேராக தரையில் படுத்துக் கொள்ளவும். படத்தில் காட்டியபடி , தலையும், காலையும் ஒரே சமயத்தில் தூக்க வேண்டும்.முதுகு தரையில் படக்கூடாது.தோணி (படகு) போன்று  முதலில் உடலை அமைக்க வேண்டும். பார்வை கால் பெருவிரல்களை நோக்கி இருக்க வேண்டும். முதலில் முதுகையும் ,கால்களையும் ஒரே நேரத்தில் தூக்குவது கடினம். கால்களை சேரில் தூக்கி வைத்து , முதுகை உயர்த்தி பழகலாம். பின் சிறிது சிறிதாக முயற்சித்த பின் இவ்வாசனம் எளிதில் செய்ய முடியும்.

பலன்கள் :

  இவ்வாசனம் வயிற்றின் மத்திய பகுதியில் நன்கு அழுத்தம் கொடுக்கும்.தொந்தி கரையும். கணையம் நன்கு இயங்கும். ஜீரண உறுப்புகள் நன்கு வேலை செய்யும். அஜீரணம், ஏப்பம் , வாயுத் தொல்லை நீங்கும்மலச்சிக்கல் ஒழியும். பெண்கள் குழந்தை பெற்ற பின் இவ்வாசனத்தை செய்தால் வயிறு பெரிதாகாது.