யோகாவின் நன்மைகள் -15 | விபரீத கரணி & சர்வாங்காசனம் செய்முறை-பலன்கள்| #Weight Loss


விபரீத கரணி

Veebareetha karani

செய்முறை :




விரிப்பில் மல்லாந்து படுத்து உடலை இளக்கவும். கால்களை வயிற்றின் மேல் மடித்து உயரத்தூக்கி கைகளால் பின்புறத்தையும், முதுகையும் உயரேக் கிளப்பி ,முழங்கைகளைத் தரையில் நன்றாக ஊன்றி, விரிந்த இருகைகளாலும்  பின்புறத்தை தாங்கி கால்களை நேராக நிமிர்த்தி நிற்கவும்.கண்பார்வை கால் பெருவிரலை நோக்கி இருக்க வேண்டும்.

 

ஆரம்பக் காலத்தில் பிறர் உதவியுடன் முதுகுப்புறம் தலையணைகளைத் தாங்களாகக் கொடுத்து நிற்கலாம். அல்லது சுவரின் ஓரமாகப் படுத்து கால்களால் சுவரை மிதித்து முதுகு புறத்தைத் தூக்கி நிறுத்தலாம் . கால்களை விறைப்பாக வைக்காமல் சாதாரணமாக வைக்கவும்.

ஒரு முறைக்கு 2 நிமிடமாக 2 முதல் 3 முறை செய்யலாம்.

 

கால்களை கீழே இருக்கும் போது காலை மடக்கிக் கைகளால் பின்புறத்தை வழுக்கி இறக்க வேண்டும்.  

 

சர்வாங்காசனம்

Sarvangasanam

செய்முறை



 

விபரீத கரணியை கொஞ்ச நாள் செய்த பின்பு தான் சர்வாங்காசனம்  செய்ய முடியும். விபரீத கரணி நிலையில் இருந்து கொண்டு இரு கைகளையும் மேலும் அழுத்தி நெஞ்சு நாடியில் தொடும்படி , உடலை உயர்த்தி கைகளை முதுகு தாங்கி நிற்கும்படி . L உருவில் நிற்கவும். இரு கண்களையும் பாதி ,மூடிய நிலையில் பார்க்கவும். கால்களை விறைப்பாக வைக்காமல் இளக்கமாக இருக்கும் படி நிற்க வேண்டும்.2 நிமிடத்திற்கு ஒரு முறையாக 3 முதல் 4 ,முறை செய்யலாம்

 

பலன்கள்:

  உடலில் உள்ள அதனை அங்கங்களுக்கும்  பலன் கிடைப்பதால் சர்வாங்காசனம் எனப் பெயரிடப்பட்டது. முதுமையைப் போக்கும். தைராய்டு கிளாண்டு நன்கு வேலை செய்யும். நியாபகசக்திக் குறைவு, தொந்தி , மலச்சிக்கல், கல்லீரல் கேடு, கண் பார்வை மங்கல், நாடி மண்டல பலக்குறைவு நீங்கும். பெண்கள் கர்ப்பப்பை நோய் வராமல் தடுக்கும். தைராய்டு, பாராதைராய்டு முதலிய இடங்களில் தேங்கி நிற்கும் இரத்தத்தை நாடி நரம்புகள் மூலம் மேலே ஏற்றி மறுபடியும் கீழே இறக்கும் சக்தி இவ்வாசனதிற்கு உண்டு, இதனால் இரத்த நலன்களுக்கு சுத்த இரத்தம் கிடைத்து சுகவாழ்வு பெறும். 


For More Details : Please Subscribe, Follows and Like Our Channel (Rehoboth Cyrus Uzhagam)

https://youtu.be/TxbfXFa7Fgc