யோகாவின் நன்மைகள் -16 | விபரீத கரணி & சர்வாங்காசனம் செய்முறை-பலன்கள்| #Weight Loss


ஹலாசனம்

செய்முறை:




வீபரீத கர்ணி , சர்வாங்காசனம் செய்து, நன்கு பழக்கப்பட்ட பிறகு இவ்வாசனம் எளிதில் செய்ய முடியும். முதலில் சர்வாங்காசன நிலையில் இருந்து வீபரீத கர்ணி நிலைக்கு வந்து, படத்தில் காட்டியுள்ளபடி இரு கால்களையும் தலைக்குப் பின்பக்கம் மெதுவாகக் கொண்டு வந்து தரையைத் தொட முயற்சிக்க வேண்டும்.

அல்லது விரிப்பில் மல்லாந்து படுத்து, கால்களை ஒட்டியவாறு நீட்டி, கைகளை  உடல் பக்கத்தில் தரையில் வைத்துக்கொண்டு  உள்ளங்கையைக்  குப்புற வைக்க வேண்டும். கால்கள் நேராக ஒட்டியவாறு இருக்க வேண்டும். மூச்சைச் சிறிது உள்ளிழுத்து கால்களை இடுப்பிலிருந்து மேல் மேல் கிளப்பி உயர்த்தி, தலைக்கு மேல் வளைத்து , சுவாசத்தை வெளியே விட்டு கட்டை விரல்களை தரையைத் தொட முயற்சிக்க வேண்டும். நாடி நெஞ்சைத் தொட வேண்டும்.

ஒரு முறைக்கு ஒரு நிமிடமாக 2  முதல் 3 முறை செய்யலாம்.

பலன்கள் :

  முதுகுத் தண்டு பலம் பெறும். நாடி மண்டலங்கள் அனைத்தும் நன்கு வேலை செய்யும். முதுமை ஒளிந்து இளமை மேலிடும். சோம்பல் ஒழியும். இடுப்பு, முதுகு, கழுத்து பலம் பெறும். பெண்கள் கருவுற்ற இரண்டு மாதம் வரை செய்யலாம். பின் செய்ய கூடாது, நீரழிவு நோய் வெகு விரைவில் குணமாகும்.   

 

 

தனுராசனம்




 

விரிப்பில் குப்புறப் படுத்துக் இரு கைகளால் ,இரு கால்களின் கணுக்கால்களை இருகப் பிடிக்கவும். சுவாசத்தை வெளியே விட நிலையில் கைகளால் கால்களை இழுத்து படத்தில் காட்டியுள்ளபடி , தலையும், கழுத்தையும் மேல் தூக்கி வளைத்து கால்களையும் மேல் நோக்கி , இழுத்து உடலை வில் போல வளைத்து நிற்கவும். தனுர் என்றால் வில் என்று பொருள். ஒரு முறைக்கு 2 முதல் 15 வினாடியாக 3 முதல் 5 தடவை செய்யவும். ஆரம்ப காலத்தில் கால்களை சற்று விரித்து வைத்து செய்யலாம். பழக பழக கால்கள் ஒட்டியவாறு இருக்க வேண்டும்.

பலன்கள்:

முதுகெலும்பின் வழியாக ஓடும் அதனை நாடி நரம்புகளுக்கும் புது ரத்தம் செலுத்தப்பட்டு உறுதி அடைகிறது. இரைப்பை, குடல்களிலுள்ள அழுக்குகள் வெளியேறும். ஜீரண ஷக்தி அதிகப்படும். சோம்பல் ஒழியும். கபம் வெளிப்படும். தொந்தி கரையும். மார்பகம் விரியும். இளமைத் துடிப்பு உண்டாகும்.

  அஜீரணம், வயிற்று வலி, வாய் துர்நாற்றம் , தொந்தி, வயிற்றுக் கொழுப்பு , ஊளைச் சதை நீங்கும். கணைய உறுப்புகள் (pancreas  )  ,சிறுநீரகக் கருவிகள் ( kidneys ), ஆண்களின் டெஸ்டிஸ் (testis ), பெண்களின் ஓவரி (ovary ) , கர்ப்பப்பை நல்ல ரத்த ஓட்டம் ஏற்பட்டு பலம் பெறும். இளமை பொலிவு உண்டாகும். பெண்களின் மாதவிடாய் சம்பந்தமான நோய்கள் நீங்கும்.


#yoga

For More Details : Please Subscribe and Like Our Channel (Rehoboth Cyrus Uzhagam)

https://youtu.be/9mSiTusQX-Y