யோகாவின் நன்மைகள் -17 | அர்த்த சிரசாசனம் & சிரசாசனம் செய்முறை-பலன்கள்| #Weight Loss



அர்த்த சிரசாசனம்

Artha Sirasasanam

செய்முறை :



விரிப்பில் மண்டியிட்டு உக்காரவும். விரல்களைச் சேர்த்து முக்கோணம் போல் விரிப்பின் மேல் அமர்த்தவும். உச்சந்தலையைத் தரையில் அமர்த்தி, பிடரியில் விரல்கள் படும் படி குனிந்து அமரவும். பின்புறத்தையும் தூக்கி கால்களை அருகே இழுத்து, முக்கோண வடிவமாக நிற்கவும். சாதாரண மூச்சுடன் கண்கள் மூடி இருக்க வேண்டும். உடல் கனம் யாவும் கையால் தாங்கும் படியாக இருக்க வேண்டும். ஒரு முறைக்கு  1 முதல் 2 நிமிடம் வரை செய்யலாம். பின் மெதுவாக ஆசனத்தை கலைக்கலாம். 2  முதல் 5  வரை செய்யலாம். சிரசாசனம் செய்யும் முன் 15 நாட்கள் இவ்வாசனம் கண்டிப்பாய்ச் செய்ய வேண்டும்.

 

பலன்கள்:

   மிகப் பலகீனமானவர்கள், வயதானோர் , மாணவர்கள், சிறுவர், பெண்கள் இவ்வாசனத்தை மட்டும் தினம் காலை, மாலை 3 நிமிடம் செய்தால் நல்ல ஆரோக்கியம்,உடல் பலம், சுறுசுறுப்பு , நியாபக சக்தி, தெளிவான கண்பார்வை உண்டாகும்.

 

 

சிரசாசனம்:

Sirasasanam:

செய்முறை:

 


15 நாட்கள் அர்த்த சிரசாசனம் செய்த பின்புதான் சிரசாசனம் தொடங்க வேண்டும். அர்த்த சிரசாசன நிலையில் சுவர் ஓரமாகவோ, மூலையிலோ இருந்து கொண்டு இலேசாக மூச்சிப் பிடித்து, கால்கள் இரண்டையும் உயரே மெதுவாகத் தூக்க வேண்டும். கால்களை விறைப்பாக வைக்காமல் சாதாரண நிலையில் வைக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் பிறர் உதவியுடன் செய்யலாம். நன்றாக  பேலன்ஸ் கிடைத்த பின் தைன்யகா நிற்கலாம். ஆரம்பத்தில் 3 நிமிடம் முதல் 5 நிமிடத்திற்கு மேல் நிற்க வேண்டாம்.  கால்களை இறக்கும் போது இரண்டு கால்களையும் மடித்து இறக்க வேண்டும். பின் மண்டியிட்டு உக்கார்ந்து நன்றாக இரு மூக்குத் துவாரம் வழியாக மூச்சி வாங்கி பின் கண்ணை மெதுவாகத் திறக்க வேண்டும்.

பலன்கள்:

   ஆசனங்ககளின் அரசன் சிரசாசனம். உடலில் உள்ள சுரப்பிகள் அனைத்தும் உறுதிப்பட்டு பல நோய்கள் வராமல் காக்கும். சிந்தனை சக்தி, நியாபக சக்தி அதிகரிக்கும். ஆண்மை மேலிடும். மலச்சிக்கல் , வெள்ளெழுத்து ,நரம்பு தளர்ச்சி நீங்கும். எந்த நோயையும் தடுக்கும் சக்தி இதற்கு உண்டு. பிட்யூட்டரி , பினியல்பாடி கோளங்கள் நன்கு இயங்கும். சுத்த ரத்தம் உடம்பிலுள்ள நாளங்களுக்குப் பாய்ச்சப்பட்டு சுகவாழ்வு , ஆரோக்கியம் மேலிடும். முகம் பொலிவு பெறும். மூளைக்கோளாறு நீங்கும். பருவமடையாத பெண்கள் பருவம் அடைவர். இவ்வாசனம் தினம் 2 நிமிடம் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும். ஆசன நிலையில் உடல்  மிக இளக்கமாக இருக்க வேண்டும்.