பக்கத்துவீட்டுக்காரியின்

முகத்திரை

எனக்கு பக்கத்து வீட்டுக்காரியோடே பேசுறதே பிடிக்காது. ஏனென்றால் அவள் ஒரு பொறாமைக்காரி. நான் என்ன காரியம் செய்தாலும் என் மீது பொறாமைப்படுவாள் என்று தெரியும். என்னிடம் அவள் அதிகம் பேசிய வார்த்தைகள் " உனக்கென்னப்பா நீ பெரிய ஆளு,நீ நினைச்சா எல்லாத்தையுமே வாங்கிடுவ. நாங்க அப்படியா" னு கேட்பாள். இந்த வார்த்தைகளை அவள் என்னோடு பேசும் போது எல்லாம் எனக்கு வெறுப்பாக இருக்கும். இந்த கதை வாசிக்கும் எத்தனை பேருக்கு இந்த மாதிரி நடந்து இருக்குனு கமெண்ட்ஸ்ல சொல்லுங்க.

அவள் வேற யாரும் இல்ல, என் சிறுவயது தோழிதான் 

எனது பெயர் சாந்தி, தோழியின் பெயர் வனஜா.  அவளோடுதான்  சிறுவயதில் விளையாட செல்வேன். அப்போது எல்லாம் எனக்கு தெரியாது அவள் பொறாமை குணம் கொண்டவள் என்று . நான்  ஒரு சுடிதார் புதியதாக வாங்கினால் கூட, " உனக்கென்னப்பா நீ பெரிய ஆளு,நீ நினைச்சா எல்லாத்தையுமே வாங்கிடுவ. நாங்க அப்படியா னு " சொல்லுவாள். நாங்க நினைச்சா கூட இத வாங்க முடியாது. வேணும்னா கனவுல வாங்கலாம்னு சொல்லுவா. அப்போ எல்லாம் இந்த வார்த்தை எனக்கு பெரியதாக தெரிந்தது இல்லை. பள்ளிப்படிப்பை முடித்து எனக்கு பொறியியல் கல்லூரிலும், அவளுக்கு ஆர்ட்ஸ் கல்லூரியிலும் இடம் கிடைத்தது. என்னை பற்றி, அருகில் இருந்த வீட்டில் எல்லாம் தவறாக சொல்லி இருக்கிறாள். நான்  பணத்திமிரு பிடித்தவள் என்று. அவள் கூறிய ஏதும் எனக்கு அப்பொழுது தெரியாது. நான் அவளுக்கு எந்த துரோகமும் செய்ததில்லை. ஆனால் என்மீது அவளுக்கு ஏன் இவ்வளவு பொறாமை. எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது அவளுக்கு கடுப்பாகவே இருந்தது. என்னுடன் பேசும் பொழுது சிரித்து பேசுவாள். ஆனால் வெளி இடத்திலோ என்னை பற்றி தவறாக கூறினாள். இதற்கிடையில் கல்லூரி படிப்பை முடித்து, எனக்கு ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது. என் தோழியோ வேலை தேடி கொண்டிருந்தாள். எனக்கு வேலை கிடைத்த விஷயத்தை அவளிடம் கூறினேன். அவளோ என்னிடம் கோவப்பட்டாள். எனக்கு ஏதும் புரியவில்லை. நான் நன்றாகத்தானே பேசினேன். பின்பு ஏன் அவள் என் மீது கோவப்பட்டாள் என்று யோசித்தேன். அவளிடம் கேட்ட பொழுது, என்னோடு பேச பிடிக்கவில்லை, இந்த இடத்தை விட்டு போ என்று கத்தினாள். ஒன்றும் புரியாமல் நான் நகர்ந்து வந்து விட்டேன். அவள் என்னோடு பேசுவதை நிறுத்தினாள்.நான் மிகவும் வருத்தப்பட்டேன். நான் வேலையில் சேர வேண்டிய நாள் வந்தது. நான் சென்னை நோக்கி கிளம்பினேன்.இரண்டுதரம் அவளுக்கு தொலைபேசியில் அழைப்பு கொடுத்தேன். அவளோ பதிலளிக்கவில்லை. நாட்கள் நகர்ந்தது. வீட்டில் எனக்கு மாப்பிளை பார்த்து கொண்டிருந்தார்கள். ஒரு நல்ல வரன் வந்தது.  நான் வீட்டிற்கு வந்தேன். மாப்பிளை வீட்டில் எல்லாருக்கும் என்னை பிடித்தது. வீட்டிலே நிச்சயதார்த்தை முடித்தார்கள். அப்பொழுது என் தோழியும் வந்து இருந்தாள். அவளை பார்த்து நான் சிரித்தேன். ஆனால் அவளோ வேண்டா வெறுப்பாக என்னை பார்த்தாள். ஏன் இவள் இப்படி மாறி போனாள் என்று யோசித்தேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை. திருமண நாள் அறிவிக்கப்பட்டது. பத்திரிகையும் அனைவர்க்கும் கொடுக்கப்பட்டது. திடிரென்று மாப்பிளை வீட்டார் கல்யாணத்தை நிறுத்தினார்கள். எங்களுக்கு பெண்ணை பிடிக்கவில்லை என்று கூறினார்கள். எனக்கும், என் வீட்டார் அனைவர்க்கும் அதிர்ச்சியாக இருந்தது.  நான் மிகவும் மனமுடைந்தேன். ஏன் என் திருமண வாழ்கை நின்று போனது?, காரணம் ஏதும் எனக்கு தெரியவில்லை. நேரடியாக மாப்பிளையிடம் கேட்கலாம்னு நினைத்து போன் பண்ணினேன், அவரோ எடுக்கவில்லை. ஏன் என்றால் எனக்கு அந்த மாப்பிளையை மிகவும் பிடித்து இருந்தது. நான் சிறிது நாட்கள் மனமுடைந்து காணப்பட்டேன். அடுத்து நிறைய வரன்கள் வந்தது. ஆனால் முதலில் என்னை பார்க்கும் போது பிடித்தவர்களுக்கு சிறிது நாட்கள் சென்ற பிறகு வேண்டாம் வேண்டாம் என்று கூறினார்கள். எனக்கு ஏன் இப்படி சொல்லுகிறார்கள் என்று புரியவில்லை. நானும் வேலைக்கு சென்றேன். காலங்கள் உருண்டோடின. எல்லாரும் என் திருமணம் ஏன் நின்றது? என்று என் கம்பெனியில் கேட்கவே அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு    வேற கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். இதற்கிடையில்  என் தோழிக்கு திருமணம் நடைபெற்றது. அவள் திருமணத்திற்கு என்னை அழைக்கவும் இல்லை. நான் புதிதாக சேர்ந்த கம்பெனியில், எனக்கு பார்த்த முதல் வரனான மாப்பிளை வேலை பார்த்து கொண்டிருந்தார். அவர் என்னை பார்த்ததும், நான் அவரை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தோம். அவரிடம் எப்படியாவது என் கல்யாணத்தை ஏன் நிறுத்தினீர்கள்? என்ற கேள்வி கேட்டு விட வேண்டும் என்று அவரிடம் பேச முயற்சித்தேன். அவரோ என்னோடு  பேசுவதை தவிர்த்தார். ஒரு நாள் அவரிடம் நேரடியாகவே கேட்டேன். அவர் கூறிய பதிலை கேட்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். என்னவென்றால், என் தோழி மாப்பிளை வீட்டாரிடம் சென்று என் குணம் சரி இல்லை என்றும், நான் கோவக்காரி என்றும், வேற ஒரு பையனை காதலிப்பதாகவும், இந்த கல்யாணத்தில் எனக்கு இஷ்டம் இல்லை என்று அவளிடம் புலம்பியதாகவும் கூறி இருக்கிறாள். இதை கேட்டதும், என் தோழிக்கு என் மீது எவ்ளவு பொறாமை இருக்கிறது என்று அன்றைக்கு உணர்ந்தேன். அதுமட்டுமல்லாமல் எனக்கு வந்த எல்லா வரன்களையும் அவளே கெடுத்து இருக்கிறாள் என்பதையும் புரிந்து கொண்டேன். நான், அவரிடம் நீங்களாவது இதை என்னிடம் சொல்லி இருக்கலாமே, என்று கேட்டேன். அதற்கு அவர், எனக்கு உன்னைய ரெம்ப பிடிச்சு இருந்தது, நீ வேற ஒருத்தங்களை லவ் பண்றனு தெரிஞ்சதும் நான் மனமுடைந்து போனேன். நீயாவது நல்ல இருக்கட்டும்னு திருமணத்தை நிறுத்தினேன்  என்றார். அவரிடம் நான் உண்மையான காரணத்தை விளக்கி கூறினேன்.அவரும்  புரிந்து கொண்டார். என்னிடம் மன்னிப்பு கேட்டார். நான் அன்றைக்கே  உன்னிடம் பேசி இருக்க வேண்டும், தவறு செய்து விட்டேன் என்று மனம் வருந்தினார். இரு வீட்டாரிடம் பேசி சம்மதம் வாங்கினார். திருமணத்திற்காக நான் ஊருக்கு வந்தேன். அன்று அதிகாலையில் நான் வனஜாவை ஜன்னல் வழியாக பார்த்தேன். வனஜாவிடம் நேரடியாக கேட்டுவிட வேண்டும், அவளை திட்டினால்தான் என் மனம் இளைப்பாறும் என்று அவளை தேடினேன். அவளை பற்றி அரசல் புரசலாக என் காதில் ஒரு செய்தி வந்தது. அவளது திருமண வாழ்கை நன்றாக அமையவில்லை. அவளது கணவன் தினமும் குடித்து விட்டு அவளை துன்புறுத்துவதாகவும், அவள் அவனை விவாகரத்து செய்து விட்டதாகவும் கேள்வி பட்டேன்.  நான் அவளுக்கு எந்த தீங்கும் செய்தது இல்லை. மற்றவர்கள் வாழ்க்கையை கெடுத்தால், அது அவர்களுக்கே ஒரு நாள் போய் சேரும் என்பதை சிந்தித்தேன். வனஜாவிடம் அதன் பிறகு நான் பேசவில்லை.

பரிசுத்த வேதாகமத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதென்னவெனில்,

 

கலாத்தியர் 6 : 7

 மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.

மேலும்,

நீதிமொழிகள் 14 : 30

சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி என்று வேதம் கூறுகிறது

அதன் பிறகு என் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

சுபம்