படித்ததில் பிடித்தது

ஒரு சிறைச்சாலையில் மூன்று துக்கு தண்டனை கைதிகள் இருந்தனர். அவர்கள் இறப்பதற்கு  முன்பு, அவர்களின் கடைசி ஆசை என்னவென்று கேட்டனர்.

முதல் கைதி : எனக்கு நல்ல உணவு, மது வேண்டும்,  இறப்பதற்கு முன்பு, என் மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க வேண்டும் என்றான். அவனின் ஆசை நிறைவேற்றப்பட்டது.

அவன் தூக்கிலிடப்பட்டான்

 

இரண்டாம் கைதி : எனக்கு ஒரு தடையாவது பெரிய ராஜமாளிகையில்  சகல வசதிகளுடன் வாழ வேண்டும் என்றான். அவனது ஆசையும் நிறைவேற்றப்பட்டது. அவன் தூக்கிலிடப்பட்டான்

 

மூன்றாம் கைதி : எனக்கு ஜெர்ரி பலம் சாப்பிடணும் போல் ஆசையாக உள்ளது என்றான். அந்த மாதம் ஜெர்ரிப்பழம் மாதம் சீசன் இல்லை. அந்த சீசன் வருவதற்கு ஆறுமாதம் ஆகும் என்பதால், அவனது மரணதண்டனையை ஆறுமாதம் தள்ளி வைக்கப்பட்டது. ஆறுமாதம் சென்ற பிறகு, அவனது கடைசி ஆசையை கேட்டனர். அவன் இந்த நாட்டின் மன்னர் அருகில் என்னை புதைக்க வேண்டும் என்றான்.

எல்லாரும் அதிர்ச்சி  அடைந்தனர். ஏனென்றால், இந்த நாட்டின் மன்னர், இறக்கவில்லை என்றனர். அவர் எப்போது இறப்பார் என்று  எங்களுக்கு தெரியாது, நாங்கள் எப்பொழுது உன் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது? என்றனர்.

அதற்கு அந்த கைதி, அதனால் என்ன? அவர் இறக்கும் வரை நான் காத்திருக்கிறேன் என்றான். இவனது புத்திசாலித்தனத்தை பார்த்து அனைவரும் வியந்தனர்.