படித்ததில்பிடித்தது
பாவத்தின் விளைவு
என் பெயர் டேவிட். நான் ஒரு பத்திரிகையாளர்.
எனக்கு கிராமத்தில் நடக்கும் சுவாரசியமான தகவல்களை சேகரிப்பதில் எனக்கு ஆர்வம் உண்டு.
ஒரு நாள் அப்படித்தான் ஒரு கிராமத்தில் நடந்த
நிகழ்வை என் நண்பர்கள் சொல்ல கேட்டேன். அதென்னவெனில், அந்த கிராமத்தில் ஒரு
பண்ணையார் குடும்பம் உள்ளது.
அந்த குடும்பத்தில் பிறக்கும் எல்லா பெண்குழந்தைகளுக்கும் கண் பார்வை
இல்லாமலே பிறப்பதாகவும், ஆண் குழந்தை
பிறந்தால் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று இறந்து விடுவதாகவும், கேள்விப்பட்டேன். அந்த கதையை கேட்டதும் அதில் இருக்கும் உண்மையான
காரணத்தை அறிய விரும்பினேன். அந்த கிராமத்தின் பெயர் கொசுக்குண்டுபட்டி .
அந்த கிராமத்தின் பெயர் கூட வித்தியாசமாக இருந்தது. அந்த கிராமம், எனது ஊரில் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அடுத்தநாளே அந்த ஊருக்கு கிளம்பினேன். ஊருக்குள் வந்ததும் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து நானும் எனது நண்பர்களும் தங்கினோம்.
கிராமம் மிகவும் அழகாக இருந்தது.
அந்த பண்ணையார் குடும்பத்தை பார்க்க சென்றேன். பார்த்ததும் அதிர்ச்சியடைந்தேன். ஏனென்றால்,
அந்த குடும்பத்தில் உள்ள எந்த ஒரு பெண் பிள்ளைகளுக்கும் கண்பார்வை என்ற ஒன்றே கிடையாது. ஆண் குழந்தைகள் மெலிந்து காணப்பட்டனர்.
எல்லாருடைய முகத்திலும் சோகம் இருந்தது. ஏனென்றால், ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி வரும் பொழுது ஆண் பிள்ளைகள் மரித்து விடுவார்கள்
என்கின்ற பயம் அவர்கள் கண்களில் தெரிந்தது. அதுமட்டுமில்லாமல், அந்த குறிப்பிட்ட நாளில்
அவர்கள் உடம்பில் தாங்கவே முடியாத வலி உண்டாவதாகவும், எல்லாரும் வலி தாங்க முடியாமல்
கதறுவதாகவும் கேள்விப்பட்டேன். ஏன் இவர்களுக்கு இந்த நிலைமை? என்று அக்கம் பக்கத்தினரிடம்
விசாரித்த பொழுது, எனக்கே அழுகை வந்து விட்டது.
அதாவது மூன்று தலைமுறைக்கு முன்பு அந்த பண்ணையார் குடும்பத்தில் கஞ்சன் என்பவர் இருந்தார்.
இந்த கிராமத்தில் அவர் மிகவும் செல்வசெழிப்பாக வாழ்ந்தவர். மேலும்
இந்த ஊர் பஞ்சாயத்தலைவராகவும்
இருந்தார்.
அவரிடம் பத்துக்கும் மேற்பட்ட
வயல்நிலங்கள்
இருந்தது. ஒரு நாள் அவர், தன்
வயல்வெளியை பார்க்கும்படி போனார். அவரது நிலத்தில் ஒரு பெண்மாடு ஓன்று மேய்ந்து கொண்டிருந்தது.
அந்த மாடு சினையாகவும் இருந்தது.
இதை பார்த்ததும் அவருக்கு கோவம்
வந்தது.
உடனே சத்தமிட்டு ஊரை கூட்டினார்.
அந்த மாட்டின் உரிமையாளர், மாட்டின் மேல் அளவு
கடந்த அன்பு வைத்து இருந்தார். ஊர் மக்கள் கூட்டமாக நிற்கும் பொழுது, தன்னை
கண்டு எல்லாரும் பயப்பட வேண்டும், யாரும் எனக்கு
முன்பு எதிர்த்து நிற்க கூடாது என்று நினைத்து அந்த மாட்டை கொடுமையான முறையில் கொல்ல
வேண்டும் என்று தீர்மானித்தான். அந்த மாட்டின் இரு கண்களையும் உயிரோடு இருக்கும் போதே
பிடுங்க வேண்டும், கண் பார்த்ததாலேதான் அது என் வயலில் மேய்ந்தது. மேலும், அதின் தோலை
உயிரோடு இருக்கும் போதே உரிக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டான். அந்த மாட்டின் உரிமையாளர் மிகவும் கெஞ்சினார்.
தான் அந்த மாட்டின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளதாகவும், இந்த ஒருமுறை மன்னித்து விடவேண்டும் என்றும், தான் அதற்கேற்ற பணத்தை தருவதாகவும் கூறினார்.
இதை எல்லாம் காதில் வாங்காத அந்த பண்ணையாளர், தான் சொன்னபடியே அந்த மாட்டை சித்திரவதை
செய்து கொன்றான். அதன் தோலை உரிக்கும் பொழுது அந்த மாட்டின் சத்தம் எல்லாரையும் கண்கலங்க
செய்தது. அந்த மாடு இறந்தும் போனது. அந்த மாடு எப்போது இறந்து போனது என்று கேட்டேன்
. ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி அன்று. என்று கூறினார்கள்.
அவர்கள் செய்த பாவத்தின் விளைவு அவர்களை தலைமுறை தலைமுறையாய்பிடிப்பதை உணர்ந்தேன். அந்த வாயில்லா ஜீவன் சாகும் வரை என்ன பாடுபட்டு
இருக்கும் என்று நினைக்கும் பொழுதே என்னையும்
அறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தது. அந்த இரக்கமற்ற மனிதனின் கல்நெஞ்சம் , அந்த வாயில்லா
ஜீவனின் உயிரும் பிரிந்தது, இன்றைக்கு அவரது
தலைமுறையே கஷ்டப்படுகிறது என்று சிந்தித்தேன். இதைத்தான் கர்மா என்றும் எல்லாரும் கூறுகிறார்கள்
போல. அந்த கிராமத்தை விட்டு அடுத்த நாளே கிளம்பினோம்.
பரிசுத்த வேதாகமத்தில் இயேசு
கிறிஸ்து இவ்வாறு கூறுகிறார்.
மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே
அறுப்பான். என்றும் மேலும் பாவத்தின் சம்பளம் மரணம் என்றும் கூறுகிறார்.
ஆகையால் ஒருவருக்கு ஒருவர் தீமை
செய்யாமல் இருப்போமாக. முடிந்தவரை நன்மை செய்வோமாக
0 Comments