படித்ததில்பிடித்தது
பெண்களை பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும் பெண்பிள்ளையின் அருமை
ஒரு ஊரில் வயதானவர் மரித்து விட்டார்.
அவரது வீட்டில் உடலை அடக்கம் செய்யும்
ஏற்பாடு நடக்கிறது. அவருக்கு மூன்று
மகன்கள், ஒரு மகள். திடிரென்று அந்த
வீட்டில் ஒருவர் வருகிறார். மரணமடைந்த
இவர், என் தோழன் என்றும், என்னிடம்
15 லட்சம் வாங்கி இருக்கிறார் என்றும்,
அந்த பணத்தை தந்தால்தான் உடலை
அடக்கம் செய்ய விடுவேன் என்றும்
கூறினார். அந்த இடத்தில் விவாதங்கள்
நடைபெறுகிறது. மூன்று மகன்களும்,
இதைப்பற்றி என் தந்தை எதுவும்
கூறவில்லை, எங்களுக்கு தெரியாது,
அதனால் நாங்கள் கொடுக்கமாட்டோம்
என்றனர். மற்ற உறவினர்களும் மகன்களே
கொடுக்காத போது, எங்களாலும் முடியாது
என்றனர். பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
அப்பொழுது திடிரென்று மரணமடைந்தவரின்
ஒரே மகள் ஓடி வருகிறாள். தனது கழுத்தில்,
கைகளில் உள்ள நகைகளை கொடுத்து,
இப்பொழுது இதை வைத்து கொள்ளுங்கள்,
அதன் பிறகு, சிறிது சிறிதாக தருகிறேன்
என்றாள். இதைக்கேட்டதும், அந்த நபர் ,
மகளே| உன் நகைகள் வேண்டாம். நான்தான்
உன் தந்தைக்கு 15 லட்சம் தர வேண்டும்.
உன் தகப்பனார், தனது மறைவுக்கு பின்,
உண்மையில் என்னை யார் நேசிக்கிறார்கள்
என்று அறிந்து அவரிடம் கொடுக்க
சொன்னார் என்றார். பெண்பிள்ளைகளை
பெற்றவர்கள் பாக்கியவான்கள்.
0 Comments