படித்ததில் பிடித்தது

கடைசிவரை படிங்க. Twist இருக்கு

ஒரு அரசனுக்கு  மூன்று மகன்கள் இருந்தனர்.

தனக்கு பின் நாட்டை மூன்று மகன்களில் 

யார்  நன்றாக ஆளுவார்கள்? என்பதை அறிய

 ஒரு போட்டியினை வைத்தான்.

தன் மூன்று மகன்களையும் அழைத்து,  

பணப்பையை கொடுத்து,  நீங்கள்  போய் 

ஏழைகளுக்கு தேவையான உணவை வாங்கி

 வாருங்கள், நீங்கள் வாங்கி வந்த உணவை

எனக்கு காட்ட தேவை இல்லை.

யாருடையது பெரியதாக இருக்கிறதோ?

அவர்களே இந்த நாட்டின் அடுத்த அரசன்

என்றான்.

மூத்த மகன் : நாம் ஏன் ஏழைகளுக்கு கொடுக்க

வேண்டும்? அப்பாகிட்ட  சமாளிச்சுக்கலாம்

என்றெண்ணி, அந்த பணத்தை கொண்டு

நன்றாக செலவு செய்தான்.

பிறகு நான்கு  மூட்டையில் குப்பைகளை

போட்டு பெரிதாக கட்டினான்

இரண்டாவது மகன் : இரண்டாவது மகனும், அந்த

 பணத்தை செலவு பண்ணினான். பின்பு ஒரு

தோட்டத்தில், கீழே  விழுந்த அழுகின பழங்களை

 மூன்று  சாக்குப்பை நிறைய எடுத்தான்.

மூன்றாவது மகன் : தன் நாட்டில் எவ்வளவு

ஏழைகள் உணவிற்காக

கஷ்டபடுகிறார்கள்? என்று கணக்கெடுத்தான்.

பின்பு  ஒரு நல்ல உணவகத்திற்கு சென்று,

அவர்களுக்கு  தேவையான உணவை

வாங்கினான். பின்பு அவர்களுக்கு தேவையான

பழங்களை ஒரு பத்து சாக்குப்பை நிறைய

வாங்கினான்.

 

மூன்று மகன்களும் அப்பாவிடம் வந்தனர்.

எல்லாரும் ஏழைகளுக்கு தேவையான

சாப்பாட்டை வாங்கி வந்து விட்டீர்களா?

என்று கேட்டான். ஆமாம்! என்று கூறினார்கள்.

அதற்கு அவர் நீங்கள் வாங்கி வந்த உணவுகளை

 முதலில் நீங்கள் சாப்பிடுங்கள், அப்புறம் 

அதை ஏழைகளுக்கு கொடுங்கள்  என்று 

கட்டளையிட்டார்.

இதை கேட்ட இரண்டு மகன்களும் திரு திருவென்று 

முழித்தனர். மூன்றாவது மகன் எல்லாருக்கும் 

உணவளித்தான். அரசன் மூன்றாவது மகனை 

அடுத்த அரசனாக முடி சூட்டினான்.