படித்ததில்பிடித்தது

ஒரு பொண்ணு, தனது காதலுடன் பஸ் நிறுத்தத்தில்

பேசி கொண்டிருக்கும்பொழுது, அவளது  அப்பா

அங்கு திடிரென்று வந்து விட்டார்.

இதை பார்த்து இருவரும் அதிர்ச்சி  அடைந்தனர்.

யாரம்மா இந்த பையன்? என்று கேட்கவே ,

இவன் எனது நண்பன் என்றாள்.

சுதாரித்து கொண்ட அந்த காதலன்,

சந்திப்பு  என்ற நாவல் உன்னிடம் இருக்கிறதா?

என்று கேட்டான்.

அதற்கு அவள்,நாளை பார்க்கலாம்” என்ற

நாவல் இருக்கிறது என்றாள்.

மேலும் அவன் மணி எழுதிய மணி” என்ற

நாவல் இருக்கிறதா? என்று கேட்டான்.

அதற்கு அவள், மாலையில் நான்காம் ஜாமத்தில்”

என்ற நாவல் இருக்கிறது என்றாள்..

மேலும் அவன், காத்திருக்கும் இடம்” என்ற நாவல்

உன்னிடம் இருக்கிறதா? என்று கேட்டான்.

அதற்கு அவள், பேருந்து நிலையத்தில் அவள்”

என்ற நாவல் உள்ளது என்றாள்..

சரி , என்று கூறி விட்டு அவன் சென்றான்.

 இதையெல்லாம் கவனித்த அவளது தகப்பன்,

என்னமா இந்த பையன் இவ்வளவு புத்தகம் படிக்கிறானா?

என்று கேட்டார்.

அதற்கு அவள், ஆமாம் அப்பா, அவன் நல்ல படிப்பாளி, புத்திசாலியும் கூட என்றாள்.

இதை கேட்ட அவளது தந்தை

அவளிடம் 

 பெரியவர்கள் முட்டாள் இல்லை” என்ற நாவலும், கால் உடைந்தால்” என்ற நாவலும் என்னிடம் உள்ளது  என்று அவனிடம் சொல்லிவிடு என்றார்.