படித்ததில் பிடித்தது

 

அக்பருடன் பீர்பால் பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது பீர்பாலை திணறவைக்க எண்ணி ஒரு கேள்வி கேட்டார்.

பீர்பால்,

1)   வெற்றிலை ஏன் அழுகியது?

2)   குதிரை ஏன் இடக்குச் செய்தது?

3)   ரொட்டி ஏன் கருகியது?

இம்மூன்று கேள்விக்கும் ஒரே பதிலை கூறுமாறு பீர்பாலை கேட்டார்

பீர்பால் பிரதியுத்திரமாக, " திருப்பாமல்" என்ற பதிலை கூறி அக்பரை ஆச்சரியப்பட வைத்தார்.