படித்ததில் பிடித்தது.

கெட்ட சகுனம்

ஒரு நாள் அக்பர் பீர்பலைப் பார்த்து,"  பீர்பால் நம்நாட்டில் கெட்ட சகுனமான ஆட்கள் யாரவது இருக்கிறார்களா?" என்று கேட்டான்.

"ஆம், அரசே! இந்த நகரத்தில்  கூட  கெட்ட சகுனமான மனிதன் ஒருவன் இருப்பதாக கேள்விப்பட்டேன். அவன் முகத்தில் யாராவது விழித்தால் அன்றைய தினம் முழுவதும் ஒரு கவளம் உணவு கூடாக கிடைக்காமல் கஷ்டப்படுவார்களாம்!". என்றார் பீர்பால்.

அப்படியா! ஒரு நாள் அவனை அழைத்து கொண்டு வாரும். சோதனை செய்து பாப்போம்" என்றார் அக்பர்.

பீர்பாலும்  அந்த கெட்ட சகுனமான மனுஷனை அக்பரின் அரண்மனைக்கு கூட்டிட்டு வந்தார். அன்று அக்பரும் தூங்கி எழுந்தவுடன் அவன் முகத்தில் விழித்தார். அன்றைய தினம் பூராவும் அக்பருக்குக் கடுமையான வேலைகள் இருந்ததால் சாப்பிட கூட நேரம் இல்லை. வேலை தொந்தரவினால்  மாலை வரை சாப்பிடாமல் இருந்து விட்டார். அப்போதுதான் அவருக்கு அந்த கெட்ட சகுனமான மனிதன் முன்பு விழித்தது ஞாபகத்துக்கு வந்தது. அதனால்தான் இன்று பூராவும் பட்டினி கிடக்க நேர்ந்தது என நினைத்தார்..

"பீர்பால் நீ அழைத்து வந்தவன் உண்மையிலேயே கெட்ட சகுனமானவன்தான்!. அவன் முகத்தில் விழித்ததால் தான் இன்று பட்டினி கிடக்கிறேன். இவனை போன்ற ஆட்கள் நாட்டில் நடமாடக்கூடாது . எனவே இவனைத் தூக்கிலிடச் செய்" என்றார்.

இதை கேட்ட பீர்பால் சிரித்தபடியே "அரசே, தாங்கள் காலையில் அவன் முகத்தில் விழித்தீர்கள். எனவே, இதுவரையில்  சாப்பிடவில்லை. ஆனால், அவனோ காலையில் தங்கள் முகத்தில் விழித்ததால் தூக்கில் தொங்கப் போகிறான். இதிலிருந்து யார் கெட்ட சகுனமானவர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்" என்றார்.

அக்பர் தன் பிழையை உணர்ந்து  தன் உத்தவரைத் திரும்ப பெற்று கொண்டார். பீர்பாலின்  சாதுரியத்தால் தூக்கில் தொங்கிருக்க வேண்டிய ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டது.