படித்ததில் வலித்தது. மதுபானத்தால் சிதைந்த வாழ்கை
ஒரு பெரிய வணிக அங்காடியில் ஒரு 7 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் ஒரு பொம்மை ஓன்று வாங்கினான். ஆனால் அவனிடம் அந்த பொம்மை வாங்குவதற்கு போதுமான அளவு பணம் இல்லை. பணம் பெறுபவர், உன்னிடம் இந்த பொம்மை வாங்குவதற்கு தேவையான பணம் இல்லை என்று சொன்னார். அந்த சிறுவன் இந்த பணம் போதாதா? என்று கேட்டான். அவர் மீண்டும் பணத்தை எண்ணிவிட்டு " இல்லடா தம்பி உன்னிடம் பணம் குறைவாக உள்ளது" என்றார். அந்த சிறுவன் அந்த பொம்மையை கையிலே பிடித்துஇருந்தான்.
இதை கவனித்து கொண்டிருந்த ஒருவர் அந்த சிறுவனிடம், அந்த பொம்மையை யாருக்கு கொடுக்க போகிறாய் என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவன் அது என் தங்கைக்கு ரொம்ப
பிடித்ததாகவும், அவள் பிறந்தநாள் அன்று பரிசளிக்க போவதாகவும் கூறினான்.
மேலும் அவன் கூறிய வார்த்தைகள் அவரது இதயத்தை உடைத்தது. " இந்த பொம்மையை என் அம்மாவிடம் கொடுத்தால் அவர்கள் என் தங்கையிடம் கொடுத்து விடுவார்கள். என் தங்கை கடவுளிடம் சென்று விட்டாள். என் அம்மாவும் கடவுளிடம் செல்ல இருக்கிறார். நான் என் தந்தையிடம் இந்த பொம்மை வாங்கிவரும் வரை அம்மா கடவுளிடம் செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டு வந்தேன். எனக்கு என் தங்கையும் , அம்மாவையும் ரொம்ப பிடிக்கும். அம்மா கடவுளிடம் செல்ல வேண்டாம் என்று அப்பாவிடம் கேட்டேன். ஆனால் அம்மா கடவுளிடம் செல்ல நேரம் வந்து விட்டதாக கூறினார்.
மேலும் அவன் கையில் அவனுடைய போட்டோ ஓன்று வைத்து இருந்தான். அதை அம்மாவிடம் கொடுத்தால், அவர்கள் தன் தங்கையிடம் கொடுப்பார்கள். அப்போதான் அவள் என்னை எப்பவும் மறக்காமல் இருப்பாள் என்று கூறினான்.
இதை கேட்ட அந்த மனிதர், அவனுக்கு தெரியாமல் சிறிது பணத்தை அவன் வைத்திருந்த பணத்துடன் வைத்து, மீண்டும் எண்ணி பாருங்கள் என்று கூறினார். அவர்கள் எண்ணிய
போது போதிய பணத்திற்கு மேலே இருந்தது.
அவர் கனத்த இதயத்துடன் அங்கிருந்து நகர்ந்தார். தினசரி பத்திரிகை ஒன்றில் ஒரு செய்தி படித்தது அவருக்கு ஞாபகம் வந்தது. ரோட்டை கடக்க முயன்ற ஒரு அம்மா, மகள் மீது ஒரு சரக்கு வண்டி மோதி விபத்துக்குள்ளானது. அந்த ஓட்டுநர் குடித்து இருந்ததாலே விபத்து நிகழ்ந்தது என்றும், மகள் சம்பவ இடத்திலே இறந்ததாகவும், தாய் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார் என்றும் , கோமா நிலையில் உள்ளார் என்றும் படித்தேன். ஒருவேளை இந்த சிறுவன் அவர்களது மகனாக இருப்பானோ? என்ற கேள்வி எனக்குள் இருந்தது.
இரண்டு நாள் கழித்து தினசரி பத்திரிகையில், அந்த பெண் உயிரிழந்து விட்டாள் என்ற செய்தியை படித்து விட்டு அந்த பெண்ணின் இறுதி சடங்கிற்கு சென்றேன். அந்த மனிதர் நினைத்தது போல அந்த பெண் , அவர் சந்தித்த சிறுவனின் தாயார். எப்படியெனில், கையில் சிறுவனின் புகைப்படமும், அந்த பொம்மையும் இருந்தது. அங்கிருந்து கனத்த இதயத்துடன் திரும்பினார். அந்த சிறுவன் தன் அம்மாவிடமும், தங்கையிடமும் வைத்திருந்த அன்புமும் பாசமும் அப்படியே உள்ளது. ஆனால் ஒரு குடிகாரன் குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் ஒரு நொடியில் அந்த குடும்பம் சிதைந்து விட்டது.
தயவு செய்து மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம்.
0 Comments