திருமணத்திற்கு முன்பு  மணப்பெண்ணும் மணமகளும் செல்போனில்  பேசிக்கொள்கிறார்கள்

ஆண் : இதற்காகத்தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன்.

 பெண்: நீ என்னை விட்டு விலகிவிடுவாயா?

ஆண் :  கனவிலும் அவ்வாறு நான் நினைக்க மாட்டேன்.

பெண் :  நீ என்னை விரும்புகிறாயா?

ஆண் : ஆமாம்! இன்றைக்கும் மட்டும் அல்ல என்றென்றும்!

பெண் : நீ என்னை மறந்து விடுவாயா?

ஆண் : அதைவிட நான் செத்து போயிரலாம்!

பெண் : என்னோடு கடைசி வரைக்கும் வருவாயா?

ஆண் : கண்டிப்பாக அதுதானே எனக்கு மிகப்பெரிய சந்தோஷமான தருணம்

பெண் : என்னை நீ அடிப்பாயா?

ஆண் : ஒருபோதும் அந்த தவறை நான் செய்ய மாட்டேன்

பெண் : நீ என்னுடன் கடைசி வரை கைகோர்த்து வருவாயா?

திருமணத்திற்கு பின்  இவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை அறிய ஆவலா? ஆம் எனில், கீழிருந்து மேலாக படிக்கவும்.

பெண் : நீ என்னுடன் கடைசி வரை கைகோர்த்து வருவாயா?

ஆண் : ஒருபோதும் அந்த தவறை நான் செய்ய மாட்டேன்

பெண் : என்னை நீ அடிப்பாயா?

ஆண் : கண்டிப்பாக அதுதானே எனக்கு மிகப்பெரிய சந்தோஷமான தருணம்

பெண் : என்னோடு கடைசி வரைக்கும் வருவாயா?

ஆண் : அதைவிட நான் செத்து போயிரலாம்!

பெண் : நீ என்னை மறந்து விடுவாயா?

ஆண் : ஆமாம் இன்றைக்கும் மட்டும் அல்ல என்றென்றும்!

பெண் :  நீ என்னை விரும்புகிறாயா?

ஆண் :  கனவிலும் அவ்வாறு நான் நினைக்க மாட்டேன்.

பெண்: நீ என்னை விட்டு விலகிவிடுவாயா?

ஆண் : இதற்காகத்தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன்.