யார் முட்டாள்கள்

நாட்டை ஆண்டு கொண்டிருந்த மன்னருக்கு ஒரு சந்தேகம் உதித்தது. அமைச்சரை வரவழைத்து, நான் இந்த நாட்டை நன்றாக ஆண்டு கொண்டிருக்கிறேன்.ஆனாலும் நம் நாட்டிலும் முட்டாள்கள் இருக்கிறார்கள் அல்லவா?. அவர்களில் ஒரு நான்கு  முட்டாள்களை அழைத்து வாருங்கள் என்றார். அமைச்சரும் ஒரு மாதம் கழித்து  நான்கு   முட்டாள்களை கண்டுபிடித்து அரசவைக்கு அழைத்து வந்தார்.

நான்காவது   முட்டாள்: மன்னா! இவன் மாட்டு வண்டியின் மேல் அமர்ந்து கொண்டு தன் துணி மூட்டையை தலை மேல் வைத்து, பயணம் செய்து கொண்டு வந்தான். ஏன் அவ்வாறு செய்கிறாய்? என்று கேட்டதற்கு, என்னை சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாது அல்லவா என்று கூறினான். இவன் நான்காவது   முட்டாள்

மூன்றாவது  முட்டாள் : அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கும் பொழுது அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களை தேடி அலைந்த கொண்டிருந்த நான்தான் மூன்றாவது  முட்டாள்.

இரண்டாவது முட்டாள் : நாட்டில் எவ்வளவு  பிரச்சனைகள் இருக்கும் பொழுது அதை தீர்க்காமல் முட்டாள்களை தேடிக்கொண்டிருக்கும் நீங்கள் தான் இரண்டாவது முட்டாள் என்றார். அரசைவையே ஆடிப்போய்விட்டது.

அரசனும் தான் செய்த தவறுக்காக வருந்தினான். பின்பு அரசன் சரி அமைச்சரே முதல் முட்டாள் யார்? என்று கேட்டார்.

முதல் முட்டாள்: அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவு வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த மொக்கையான கதைக்கு வந்து நாட்டின் மிக பெரிய முட்டாள் யார் என்று தேடி படித்து கொண்டிருக்கிறார்களே இவர்கள் தான் முதல் முட்டாள் என்றார்.